திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடிமேல் அடி வாங்கும் விஜய் ஆண்டனி.. படத்தை திரையரங்கில் வெளிவரத்துக்கு கூட வாய்ப்பில்லையாம்

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் படபிடிப்பு நடக்கும் இடத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தார். பின்பு அடுத்தகட்ட வேலையாக படத்தை முடிப்பதற்கு மும்மரமாக வேலை பார்த்து வந்தார். இந்த படத்துடன் அவர் மூன்று படங்கள் வெளியிடுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

மேலும் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பு சாட்டிலைட் மற்றும் ஓ டி டி தளத்தில் விற்க முயற்சி நடந்துள்ளது. ஆனால் இந்த படத்தை ஒருவரும் வாங்குவதற்கு வரவில்லையாம். இவர் படங்கள் பொதுவாகவே ஒரு கருத்துள்ளதாகவும் மக்களுக்கு பிடித்த வகையிலும் தான் அமையும். அந்த வகையில் இந்த படங்களும் கண்டிப்பாக அப்படி தான் இருக்கும்.

Also read: பிச்சைக்காரன் 2 பட கதை இதுதான்.. தேறி வரும் விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்த சோதனை

ஆனாலும் ஏன் இவர்கள் இந்த படத்தை வாங்குவதற்கு முன் வரவில்லை என்று தெரியவில்லை. பின்பு இதன் அடுத்த கட்டமாக முக்கிய நிறுவனத்திடம் பேசலாம் என்று சில ஏற்பாடுகள் செய்திருக்கிறார். அதாவது உதயநிதியிடம் விற்பதற்காக திமுகவில் முக்கியமான ஒருவரிடம் பேசி இருக்கிறார். அவரும் இதை உதயநிதியிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் உதயநிதியிடம் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. இப்பொழுது இவர் கையில் மூன்று படங்களை வைத்துக் கொண்டு வெளியிட முடியாமல் தவித்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் உடல் நிலை தேறி வந்த நிலையில் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார்.

Also read: விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலைமை.. மலேசியாவில் இருந்து வெளியிட்ட வைரல் ட்விட்டர் பதிவு

இப்படி தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கும் இவருடைய நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மேலும் பிச்சைக்காரன் படம் சம்மருக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்பொழுது இதற்கு வந்து தடைகள் ஏமாற்றத்தை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது.

இவருக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து எப்படி மீண்டு வந்தாரோ அதே அளவிற்கு இந்த படத்தை வெளியிடுவதற்கான தடைகளையும் தகர்த்தெறிந்து கூடிய விரைவில் இவர் எதிர்பார்த்த மாதிரி படத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளோ சோதனைகளையும் பார்த்த விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம்  கண்டிப்பாக ஒரு சரித்திரம் படைத்த படமாக மாறும்.

Also read: பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்.. விபத்தில் இருந்து தப்பித்த விஜய் ஆண்டனிக்கு வந்திருக்கும் புது பிரச்சனை

Trending News