சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

தனுஷ் மாதிரி போனாத்தான் பல கோடி பார்க்க முடியும்.. ஃபாலோ பண்ணும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். அசுரன், கர்ணன் ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷின் சினிமா கேரியர் அநியாயத்துக்கு டாப்பில் சென்று கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கும் அளவுக்கு பிசியான நடிகராக வலம் வருகிறார்.

அதேபோல் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

தனுஷ் சமீபகாலமாக தன்னுடைய கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு புதிய ஐடியாவை கையாண்டு வருகிறார். அதாவது தனக்கு படம் கொடுக்க வரும் தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து மூன்று நான்கு படங்கள் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.

அதாவது சம்பளம் பேசாமல் ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்கிறார். அந்த நான்கு படங்களில் ஒவ்வொரு படங்கள் வெற்றி அடையும் போதும் சம்பளத்தை கூட்டி குறைத்து வாங்கி வருகிறாராம். தற்போது இதே ஐடியாவை தான் விஜய் ஆண்டனியும் பாலோ செய்துவருகிறார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

விஜய் ஆண்டனியும் தற்போது தன்னிடம் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமாகி கொள்கிறாராம். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் விஜய் ஆண்டனியை தொடர்ந்து 5 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சமீபத்தில்தான் விஜய் ஆண்டனி போயஸ் கார்டனில் சுமார் 28 கோடிக்கு ஒரு வீடு வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி படங்கள் தியேட்டரில் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் தொலைக்காட்சிகளில் அவரது படங்கள் நல்ல டிஆர்பி பெற்று வருவதாக ஒரு கருத்துக்கணிப்பு உள்ளது. இதன் காரணமாகவே அவரை வைத்து படம் தயாரிக்க பலரும் ரெடியாக இருக்கிறார்களாம்.

dhanush-vijay-antony-cinemapettai-01
dhanush-vijay-antony-cinemapettai-01
- Advertisement -spot_img

Trending News