செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

மணிரத்னத்தின் அடிமடியில் கைவைத்த விஜய் ஆண்டனி.. சம்பவம் செய்த பிச்சைக்காரன்-2

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக சினிமாவிற்குள் வந்திருந்தாலும் அவரிடம் இருக்கும் திறமையை வைத்து அடுத்தடுத்து ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க முடியும் என்றால் அதை இன்றைய காலகட்டத்தில் இவராகத்தான் இருக்க முடியும். அதாவது தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் 2 படத்தை இவரை இயக்கினார்.

அத்துடன் இப்படத்தை எழுதியவர், ஹீரோ, இசையமைப்பாளர், தயாரிப்பாளர்,டிஸ்ட்ரிபியூட்டர் என அனைத்தையும் ஒருவராகவே செய்து சாதனை படைத்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய வரவேற்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மாதம் 19 ஆம் தேதி இதனுடைய இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. ஆனால் இதன் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு போல் இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Also read: விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 மொக்கை வாங்கியது.. இதுல பார்ட் 3 வேறயா

அத்துடன் படத்திற்கு சராசரியான வசூலை மட்டும்தான் பெற்று வருகிறது. அதே சமயம் இந்த படம் தெலுங்கில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் வந்த பிச்சைக்காரன் படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ அதேபோல் கிடைத்திருக்கிறது. அதனால் தெலுங்கு மக்கள் திரண்ட வண்ணமாக இப்படத்தை தியேட்டர்களில் போய் பார்த்து வருகிறார்கள்.

அந்த அளவிற்கு இப்படம் அக்கடதேச ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையாக இருக்கிறது. இதனால் அங்க இப்படத்திற்கான வசூல் முதல் நாளிலே 4.5 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆனால் அங்கு வெளியிட்ட பொன்னியின் செல்வன் 2 படம் முதல் நாள் 2.8 கோடி வசூலை மட்டும் தான் பெற முடிந்தது. இது மணிரத்தினத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சறுக்கு. மேலும் இவர் படத்துக்கு இணையாக பிச்சைக்காரன் 2 வெளியீட்டு அதிக லாபத்தை பெற்று பெரிய சம்பவத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: முதல் பாக மேஜிக் விஜய் ஆண்டனிக்கு கை கொடுத்ததா.? பிச்சைக்காரன் 2 எப்படி இருக்கு? முழு விமர்சனம்

அட்லீஸ்ட் பிச்சைக்காரன் 2 தமிழ் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்றாலும் தெலுங்கில் உள்ளவர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது. அத்துடன் வசூல் ரீதியாகவும் அதிகரித்து இருக்கிறது. அதனால் இன்னும் சில தினங்களுக்கு பிச்சைக்காரன் 2 படம் வசூல் வேட்டையாட போகிறது. இதனால் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை பின்னுக்கு தள்ளி விட்டது.

ஒன் மேன் ஆர்மியாக இருந்து பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்து வெளியிட்ட விஜய் ஆண்டனிக்கு தமிழில் கலையான விமர்சனங்கள் கிடைத்து இருந்தாலும் இவருடைய திறமைக்கு அங்கீகாரமும் கிடைக்கும் வகையில் அக்கட தேசத்தில் பிச்சைக்காரன் 2 ராஜ நடை போட்டு வருகிறது. கடைசியில் மணிரத்தினத்தின் அடிமடியிலேயே விஜய் ஆண்டனி கை வைத்து விட்டார் என்று சொல்லும் அளவிற்கு பட்டைய கிளப்பி வருகிறது.

Also read: ஆதித்த கரிகாலன் முதல் குந்தவை வரை அசிங்கப்படுத்திய கொடுமை.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மணிரத்தினம்

Trending News