வியாழக்கிழமை, நவம்பர் 21, 2024

அரசியல் திரில்லராக வெளியான விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Hitler Movie Review : தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் விவேக் மற்றும் மெர்வின் குழு இசை அமைத்துள்ளது.

ஹிட்லரின் ஆட்சியை பார்த்து பலரும் அஞ்சினர். அப்படிப்பட்ட ஹிட்லரின் டைட்டிலை கொண்டு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் இந்தப் படம் அரசியல் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்தில் இருந்து மக்களுக்கு எதுவும் செய்யாத அரசியல்வாதிகள் பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தின் தொடக்கத்தில் தேனியில் உள்ள பெண்கள் பாலம் அமைக்காததால் வெள்ளத்தில் சிக்கி இருக்கின்றனர். இதனால் நீரில் அடித்து செல்லப்பட்டு இறக்கின்றனர். அதன் பிறகு நிகழ் காலத்தை மாநில தேர்தலை எதிர்நோக்கி செல்கிறது.

விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரை விமர்சனம்

இதில் வேலை இல்லாமல் இருக்கும் விஜய் ஆண்டனி ரெடிங்க்ஸலியுடன் நட்புக் கொள்கிறார். மேலும் கதாநாயகி ரியா சுமனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் நிலையில் அவருடன் காதல் ஏற்படுகிறது. இந்த தேர்தலில் விஜய் ஆண்டனியின் பங்கு இருக்கிறது. நேர்மையான காவல் அதிகாரியாக கௌதம் வாசுதேவ் மேனன் இருக்கிறார்.

அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் பணம் மோசடி செய்கின்றனர். அவர்கள் யார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சரியான தண்டனை கொடுக்கப்படுகிறதா என்பதுதான் ஹிட்லர் படத்தின் கதை. ஹிட்லர் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கதையைக் கொண்டு செல்ல இயக்குனர் நினைத்திருக்கிறார்.

ஆனால் படத்தில் பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்திருந்தது. கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஹிட்லர் படம் பார்வையாளர்களின் சுவாரசியத்தை தூண்டவில்லை என்பதுதான் எதார்த்தம். ஆனால் விஜய் ஆண்டனியின் நடிப்புக்காக ஒரு முறை பார்க்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் :2/5

- Advertisement -spot_img

Trending News