ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

விஜய் ஆண்டனி படத்தலைப்புக்கே 40 கோடிக்கு வியாபாரமான புதிய படம்.. மனுஷனுக்கு அப்படி ஒரு ராசி!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தலைப்பின் மூலமாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மிகச் சொற்பமான நடிகர்களில் விஜய் ஆண்டனி முக்கிய இடத்தைப் பெறுகிறார். ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான தலைப்பு வைக்க வேண்டும் என்பது இவரது தாரக மந்திரமாக இருக்கிறது.

அது அவருக்குப் பெருமளவில் ஒர்க் அவுட் ஆகிறது என்பதுதான் விஷயமே. இதுவரை விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த ஒவ்வொரு படமும் வித்தியாசமான தலைப்புகளை கொண்டது. பிச்சைக்காரன், சைத்தான், எமன், திமிரு புடிச்சவன் என சொல்லிகொண்டே போகலாம்.

இவ்வளவு ஏன் சமீபத்தில் விஜய் ஆண்டனி ஒப்பந்தமான புதிய படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் எனவும் பெயர் வைத்துள்ளனர். இப்படி படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு வைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து தியேட்டருக்கு மக்களை வரவழைத்து விடுகிறது.

அந்த வகையில் விஜய் ஆண்டனி தற்போது கொலை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் தலைப்புக்கே சுமார் 40 கோடிக்கு வியாபாரம் பேசப்பட்டு வருகிறதாம். மேலும் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக கூறுகின்றனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் ஏற்கனவே கொலைகாரன் என்ற படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் பிச்சைக்காரன் என்ற டைட்டில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் படம் 100 நாட்கள் ஓடி 50கோடி வசூலைத் தாண்டியது குறிப்பிட வேண்டிய ஒன்று.

கடைசியாக 2019ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் கொலைகாரன் என்ற படம் வெளியானது. அதன் பிறகு கோடியில் ஒருவன், அக்னிச் சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றன.

vijay-antony-next-movie
vijay-antony-next-movie

Trending News