எப்படி அப்டேட் கொடுக்கிறார் பாருங்கள்.. தல அஜித், விஜய் ஆண்டனியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்

பெரிய ஸ்டார்கள் எல்லாம் ஆண்டுக்கு ஒரு படம் வெளியிட்டு வரும் நிலையில் விஜய் ஆண்டனி மட்டும் மாசத்திற்கு ஒரு புது படத்தின் அப்டேட் வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் என அடுத்தடுத்து நான்கு படங்கள் வெளியாகின.

இந்த ஆண்டு, ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் என இதுவரை மூன்று படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்படி இருக்க, அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகுமா என்றே தெரியவில்லை. தவிர, ரேஸ் பற்றிய அப்டேட் மட்டும் கொடுத்து வருகிறாரே தவிர படத்தின் அப்டேட் ஒன்றும் பெரிதாக வந்த பாடில்லை. முக்கியமாக இந்த வருடம் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை.

பாத்து கத்துக்கோங்க..

லியோ ஜான் பால் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இப்படம் அவருக்கு 12 ஆவது படமாகும். ககனமார்கன் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு பாதி உடல் மொத்தம் கருப்பு நிறம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது கூட அவர் படத்தின் கெட் அப்பில் இருந்தபடியே கலந்துகொண்டார் . விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது. ஹாரர் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அப்டேட் வந்த நிலையில், நெட்டிசன்கள் பலர், “அவரை பார்த்து கத்துக்கோங்க.. எப்படி படம் ஓடினாலும் இல்லையென்றாலும், ரசிகர்கள் உற்சாக படுத்த அடுத்தடுத்த படத்தில் நடிக்கிறார் என்று. வருடத்திற்கு அவரை போல 4 படங்கள் கொடுங்கள் என்று கேட்கவில்லை.. ஒரு படமாவது கொடுக்கலாமே என்று தான் கேட்கிறோம். அவரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் கடவுள் அஜித் அவர்களே..” என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment