Vijay Antony: இருக்கிறதுலேயே பெரிய சோகம் புத்திர சோகம் என்பார்கள். இப்படி ஒரு சோகத்தை தான் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் குடும்பத்திற்கு கொடுத்து சென்றிருக்கிறார் அவருடைய மகள் மீரா. ஒரு 16 வயது குழந்தை தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தது இப்போது மிகப்பெரிய பேசும் பொருளாகவே இருக்கிறது.
விஜய் ஆண்டனியின் மகள் மீரா இரு தினங்களுக்கு முன் அவருடைய வீட்டில் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டது. விஜய் ஆண்டனியின் மனைவி, நீ எதுவாக இருந்தாலும் எங்ககிட்ட சொல்லி இருக்கலாமே என்று சொல்லி கண்கலங்கியது கூட எல்லோரையும் கனக்க வைத்தது.
Also Read:6 மாதமாக வலிகளை தாங்கி இறுகிப்போன விஜய் ஆண்டனி.. நிலைகுலைய வைத்த மகளின் மரணம்
மீடியாக்கள் பலவும் விஜய் ஆண்டனியின் வீட்டிலிருந்து, கல்லறை தோட்டம் வரை பாலோ செய்து வீடியோக்கள் போட்டது கூட மிகப் பெரிய சர்ச்சையானது. மீராவின் மறைவிற்கு அவருடைய பள்ளி மாணவிகளிலிருந்து ஆசிரியர்கள் வரை வந்து கண்ணீர் மல்க நின்றிருந்தார்கள். இதை வைத்து மீரா அவருடைய பள்ளியில் எப்படி ஒரு மாணவியாக இருந்திருக்கிறார் என்று கூட நன்றாக தெரிந்தது.
தன்னுடைய மகளின் மறைவிற்குப் பிறகு நேற்று விஜய் ஆண்டனி மௌனம் கலைத்து, ஒரு கடிதத்தை தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். அதில் என்னுடைய மகள் மீரா ரொம்பவும் அன்பானவள், தைரியமானவள். ஜாதி, மதம், வறுமை, வன்மம் இல்லாத ஒரு உலகத்திற்கு என் மகள் சென்று இருக்கிறாள்.
என்னுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள், நானும் அவளுடனே இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியம் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் என்று தன்னுடைய கடிதத்தில் நெஞ்சை உருக்கும் படியான வாசகங்களை எழுதி இருக்கிறார்.
எந்த ஒரு தாய் தகப்பனுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். விஜய் ஆண்டனியின் தந்தையும் இதுபோன்று தற்கொலை தான் செய்திருக்கிறார். தற்போது அவருடைய மகளும் இதே முடிவை எடுத்து இருப்பது அந்த குடும்பத்தையே உருக்குலைய செய்திருக்கிறது.
Also Read:விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்த திரையுலகம்