Vijay Antony : நேரடியாக திரையரங்குக்கு சென்று ரசிகர்கள் படத்தை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் செலவிடும் நேரம் மற்றும் பணம் ஆகியவற்றிற்கு அந்த படம் ஒர்த்தாக இருக்கிறதா என சினிமா விமர்சகர்களின் ரிவியூவை பார்த்துவிட்டு தான் செல்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் கொடுக்கும் விமர்சனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் ப்ளூ சட்டை கொடுக்கும் விமர்சனம் நூற்றில் 99 படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கொடுத்து வருகிறார்.
ரோமியோவை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

அத்தி பூத்தார் போல் ஏதாவது ஒரு படத்திற்கு மட்டும் அவரது வாயால் நல்ல விமர்சனம் கிடைக்கும். இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனியின் ரோமியோ படம் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் மிகவும் மோசமான விமர்சனத்தை கொடுத்திருந்தார்.
அதோடு இந்த படத்திற்கு போட்டியாக வெளியான ஜிவி பிரகாஷின் டியர் படமும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. பாக்ஸ் ஆஃபீஸில் ரோமியோ மற்றும் ஜிவி பிரகாஷ் இரண்டுமே தோற்றுவிட்டதாகவும் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருந்தார்.
நொந்துபோய் விஜய் ஆண்டனி போட்ட பதிவு

இந்நிலையில் விஜய் ஆண்டனி இவரால் நொந்து போன நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். பல நல்ல படங்களை ப்ளூ சட்டை போன்ற சிலர் தவறாக விமர்சித்து வருகின்றனர்.
இவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மேலும் ரோமியோ ஒரு நல்ல படம் தியேட்டருக்கு போய் பாருங்க, கமலின் அன்பே சிவம் படத்தைப் போல இந்த படத்தை ஆக்கிடாதீங்க என வேண்டுகோள் வைத்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் இந்தப் பதிவை ப்ளூ சட்டை மாறன் போட்டு அந்த கடைசி லைன் என குறிப்பிட்டிருக்கிறார்.