வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கனத்த இதயத்துடன் மேடை ஏறிய விஜய் ஆண்டனி.. இளைய மகளுடன் கலந்து கொண்ட புகைப்படம்

Vijay Antony: விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் கோலிவுட் சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அதிகம் உத்வேகம் கொடுக்கும் படியாக பேசக்கூடிய விஜய் ஆண்டனி உடைய மகள் மரணத்திற்கு பல காரணங்கள் உலாவிக் கொண்டிருந்தது. மேலும் மிகுந்த மன அழுத்தம் காரணமாகத்தான் மீரா இந்த முடிவு எடுத்தார் என கூறப்படுகிறது.

மேலும் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் என் மகள் உடன் நானும் இறந்து விட்டேன், இனி அவள் பெயரில் நிறைய நல்ல காரியங்கள் செய்வேன் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் மகள் இறந்து 10 நாட்கள் ஆன நிலையில் மீண்டும் தனது படத்திற்கான வேலையில் விஜய் ஆண்டனி இறங்கி இருக்கிறார்.

Also Read : விஜய் ஆண்டனியை வளர்த்து விட்ட 5 படங்கள்.. அம்மாவுக்காக பிச்சைக்காரனாக மாறிய கோடீஸ்வரன்

கடைசியாக விஜய் ஆண்டனியின் நடிப்பில் பிச்சைக்காரன் 2 படம் வெளியான நிலையில் அடுத்ததாக ம் என்ற படத்தில் நடித்துள்ளார். சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நந்திதா மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த விழாவில் தனது இளைய மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். மேலும் கனத்த இதயத்துடன் மேடை ஏறிய விஜய் ஆண்டனி தன்னுடைய வாழ்வில் மிகப்பெரிய இழப்பை சந்தித்த பிறகு எதிர்கொள்ளும் முதல் நேர்காணல் என மிக உருக்கமாக பேசினார். மேலும் 10 வருடத்திற்கு பிறகு இந்த படம் தனக்கு கிடைத்ததாக கூறியிருந்தார்.

Also Read : மகளுடன் நானும் செத்து விட்டேன்.. மனதை கணக்க வைத்த விஜய் ஆண்டனியின் கடிதம்

ஒரு இழப்பில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் கண்டிப்பாக வேறு தொழில்களில் கவனம் செலுத்தினால் மட்டுமே முடியும். இப்போது விஜய் ஆண்டனி மிகுந்த மன தைரியத்துடன் தனது வேலையை திரும்ப தொடங்கி இருப்பது பாராட்டக்கூடிய விஷயம். மேலும் விஜய் ஆண்டனி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி தனது இளைய மகளுடன் இருக்கும் புகைப்படம்

vijay-antony-lara
vijay-antony-lara

Trending News