புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மகளின் பிரிவை தாங்க முடியாத விஜய் ஆண்டனி.. நிம்மதி இல்லாமல் அவர் மனைவி வெளியிட்ட பதிவு

Vijay Antony’s Wife Suffering: ஒருவருக்கு வாழ்க்கையில் என்னதான் கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும், அவருக்கு பின்னால் பக்க பலமாக இருந்து ஆறுதல் கொடுப்பது குடும்பமாக தான் இருக்கும். அந்த வகையில் மனைவி மகள்கள் என சந்தோஷமாக இருந்த விஜய் ஆண்டனிக்கு பெரும் துயர்வு ஏற்பட்டு விட்டது. நடிப்பு மற்றும் இசையமைப்பாளராக பிஸியாக கேரியரில் ஜெயித்துக் கொண்டு வந்த விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய துக்கத்தை கொடுத்தது மகளின் இறப்பு.

அதாவது செப்டம்பர் 19ஆம் தேதி விஜய் ஆண்டனியின் மகள் அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். இது விஜய் ஆண்டனியின் குடும்பத்திற்கு பெரும் இடியாக விழுந்தது. இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் எப்படியாவது வரவேண்டும் என்று மொத்த குடும்பமும் போராடி வருகிறார்கள். ஆனாலும் ஆசை ஆசையாக வளர்த்த தன் மகள் பக்கத்தில் தற்போது இல்லை என்ற ஒரு விஷயத்தை மனது ஏற்க மறுக்கிறது.

அத்துடன் தன் மகளின் நினைவுகளை பார்க்கும் பொழுது கண்ணில் இருந்து கண்ணீர் பொங்கி எழுகிறது. அதற்காக மகளை நினைத்து சோகமான பதிவுகளை உருக்கமாக பதிவிட்டு வருகிறார். அத்துடன் விஜய் ஆண்டனியின் மனைவியும் மகளிடம் நேரடியாக பேசும் விதமாக, மீரா தங்கம் உனது பியானோ நீ எப்பொழுது தழுவுவாய் என்று உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: எவ்வளவு முட்டி மோதியும் ஜெயிக்க முடியாத விஜய் ஆண்டனி.. அடுத்தடுத்து தூக்கி விட காத்திருக்கும் 3 படங்கள்

இந்த உலகம் உனக்கானது இல்லை என்று முடிவு பண்ணி எங்களை ஒட்டுமொத்தமாக தவிக்க விட்டு போய்விட்டாயே. ஆனால் உன்னுடைய அம்மாவை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. வாழ்க்கைக்கும் இறப்பிற்கும் நடுவில் நாங்கள் உன்னை நினைத்து தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறோம். மொத்த வாழ்க்கையும் எங்களுக்கு இருள் சூழ்ந்து விட்டது என்று விஜய் ஆண்டனியின் மனைவி உருக்கமாக மகளை நினைத்து வருந்துகிறார்.

சில விஷயங்களை என்ன தான் மாற்ற வேண்டும் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும், அது இன்னும் அதிகமாக தான் நம்மளை ஈர்க்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த ஒரு விஷயத்தை தான் தற்போது விஜய் ஆண்டனியின் குடும்பமும் அனுபவித்து வருகிறது. என்னதான் மகளின் பிரிவை மறந்து வேலையில் கவனம் செலுத்தினாலும் அவருடைய இறப்பு மிகப்பெரிய துயரத்திற்கு கொண்டு போய் சேர்க்கிறது.

இதனால் இவர்களால் அடுத்தடுத்து எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல், சோகத்திலேயே இருக்கும் படி அவர்களை வருந்த வைக்கிறது. இவர்களுக்கு ஆறுதல் கூறும் விதமாக, மகள் லாராவுக்காக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அடுத்த கட்ட பயணத்தை தொடங்க வேண்டும் என்று விஜய் ஆண்டனியின் மனைவி போட்ட ட்விட்டருக்கு பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also read: விஜய் ஆண்டனிக்கு நெருக்கடி கொடுத்தா இறுகப்பற்று.? ரத்தம் தெறித்த முதல் நாள் வசூல் விவரம்

Trending News