புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மொரட்டு ரொமான்ஸில் விஜய் ஆண்டனியின் ரோமியோ போஸ்டர்.. பாலுக்கு காமினேஷன் விஸ்கி

Romeo Poster : இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அதுவும் விஜய் ஆண்டனி குறிப்பாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இப்போது ரோமியோ படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

அந்தவகையில் விநாயக் இயக்கத்தில் குட் டெவில் ப்ரொடக்சன் சார்பில் விஜய் ஆண்டனியின் ரோமியோ படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். கொடை விடுமுறையை குறி வைத்து இந்த படம் வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவி தான் விநியோகம் செய்கிறது. இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது விஜய் ஆண்டனியின் கையில் பால் செம்பும், மிருணாளினி கையில் விஸ்கி பாட்டிலும் இருக்கிறது. மேலும் இந்த போஸ்டரை விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Also Read : 2023-ல் அதிக படம் நடித்த 5 ஹீரோக்கள்.. தோல்வியிலும் துவழாத விஜய் ஆண்டனி

மொரட்டு ரொமான்ஸ், மில்க் அண்ட் விஸ்கி, இந்தக் கோடை விடுமுறையில் பிளாக்பஸ்டர் ஹிட் என்ற போஸ்டர் உடன் விஜய் ஆண்டனி பதிவிட்டிருக்கிறார். என்ன இப்படி ஒரு காம்பினேஷன் என்று ரசிகர்களையே வியந்து பார்க்கும்படி
தான் ரோமியோ போஸ்டர் இடம் பெற்று இருக்கிறது. அதோடுமட்டும் இல்லாமல் போஸ்டரே டாம் அண்ட் ஜெர்ரி ஆக உள்ள நிலையில் படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்க்கப்படுகிறது.

romeo-poster
romeo-poster

Also Read : 2023-இல் மொத்தமா மானத்தை வாங்கிய ஐந்து ஹீரோக்கள்.. நண்பனை நம்பி ஏமாந்து கண்ணீர் விட்ட உதயநிதி

Trending News