வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் விஜய் ஆண்டனி.. அக்கட தேசத்தை நம்பி 100 கோடி பட்ஜெட்டில் தோல்வி படம்

Actor Vijay Antony: விஜய் ஆண்டனிக்கு ஒரு பக்கம் இசையின் மேல் ஆர்வம் இருந்தாலும் அதையெல்லாம் விட நடிப்பில் அதிக பேரும், புகழும் கிடைப்பதால் முழு கவனத்தையும் அதில் செலுத்தி வருகிறார். அதற்காக படங்களில் நடிக்கும் போது தத்ரூபமாக சில காட்சிகள் இருக்க வேண்டும் என்று எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கவும் தயங்க மாட்டார்.

அப்படி பிச்சைக்காரன் 2 படத்தில் ஒரு ரிஸ்க்கை எடுத்து பெரிய விபத்து ஆன நிலையில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருக்கிறார். இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக போகவில்லை.

Also read: மணிரத்னத்தின் அடிமடியில் கைவைத்த விஜய் ஆண்டனி.. சம்பவம் செய்த பிச்சைக்காரன்-2

ஆனால் தெலுங்கில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி சூப்பர் ஹிட் படமானது. அத்துடன் நல்ல லாபத்தையும் பெற்று கொடுத்திருக்கிறது. மேலும் தமிழில் வெற்றி அடையாமல் போனதற்கு பிச்சைக்காரன் 1 மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் இதனுடைய இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் அந்த அளவிற்கு இந்தப் படம் தமிழ் ரசிகர்களை கவரவில்லை. அதனால் தான் இங்கே தியேட்டர்கள் அனைத்தும் வெறிச்சோடி இருந்த நிலையில் பரிதாபமாக பிச்சைக்காரன் 2 தோல்வியடைந்தது. ஆனால் தெலுங்கில் இப்படத்தை கொண்டாடும் அளவிற்கு அங்கு இருக்கும் மக்களுக்கு பிடித்திருக்கிறது.

Also read: தட்டு தடுமாறும் விஜய் ஆண்டனி.. அதிர்ச்சியை கிளப்பிய பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

அதனால் தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கப் போகிறார். அதுவும் மிகப்பெரிய பிரம்மாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறார். தமிழில் தோல்வி அடைந்த நிலையில் அக்கட தேசத்தை நம்பி களம் இறங்க இருக்கிறார்.

அத்துடன் இவருடைய மிகப்பெரிய டார்கெட் தமிழிலும் பிச்சைக்காரன் 3 வெற்றி அடைய வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காக என்ன வேண்டுமானாலும் ரிஸ்கை எடுக்கலாம் என்று இன்னும் கூடுதலாகவே மூளையை கசக்கி கொண்டு வருகிறார். எது எப்படியோ ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி என்று இறங்கிவிட்டார்.

Also read: பிச்சைக்காரன் வெளியான 24 மணி நேரத்தில் இப்படி ஒரு சம்பவமா? விஜய் ஆண்டனி சார் என்ன இதெல்லாம்

Trending News