செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

மகாநதி சீரியலில் காவிரியின் தங்கை பங்க்ஷனுக்கு மாமன் சீரோடு கெத்தாக வரும் விஜய்.. வாய் அடைத்துப் போன சாரதா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய்க்கு மாமி பொண்ணு பார்க்கிறார் என்று தெரிந்ததும் காவேரி இந்த மாதிரி தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதீர்கள். விஜய் இடம் கேட்காமல் நீங்கள் இப்படி பண்ணுவது சரியில்லை என்று சொல்கிறார். அப்பொழுது அங்கே வந்த விஜய் இடம் மாமி உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா என்று கேட்கிறார். விஜயும் சம்மதம் என்று தெரிவித்த நிலையில் காவிரி கடுப்பாகிவிட்டார்.

அந்த கடுப்பில் இரவு முழுவதும் காவேரி புலம்பி கொண்டே இருக்கிறார். என்ன தைரியம் இருந்தால் கல்யாணத்துக்கு ஓகே என்று சொல்லி இருப்பார், அவரே அப்படியே விட்டுவிடக்கூடாது நானும் காலையில் மாமியிடம் எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க என்று சொல்லப் போகிறேன். அப்பொழுது தெரியும் விஜய்க்கு இந்த காவேரி யார் என்று என புலம்புகிறார்.

உடனே விஜய், தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது காவிரியை சீண்டுவதற்காக இந்த மாதிரி பொய் சொன்னேன் என்று சொல்லும்பொழுது தாத்தா நீ மறுபடியும் ஏன் இந்த மாதிரி தேவையில்லாத விஷயத்தை செய்கிறாய். ஒருமுறை யோசிக்காமல் செய்ததற்கு இப்பொழுது திண்டாடிக் கொண்டிருக்கிறாய். கொஞ்சமாவது பொறுப்பாக நடந்து கொள் என்று திட்டி விடுகிறார்.

அடுத்ததாக நர்மதா வயிறு வலிக்கு என்று சொல்லிய பொழுது கங்கா என்ன ஆச்சு என்று பார்க்கிறார். அப்பொழுது நர்மதா பெரிய மனுசியாகிட்டார் என்று தெரிந்ததும் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். உடனே யமுனாவிற்கு ஃபோன் பண்ணி தகவலை சொல்கிறார்கள். அப்பொழுது யமுனா நவீனிடம் சொல்லிய நிலையில் இரண்டு பேரும் கிளம்பி நர்மதாவை பார்ப்பதற்கு வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து நர்மதா பங்க்ஷனை சிறப்பாக பண்ண வேண்டும் என்பதற்காக கீழே மாமியிடம் பேசி அந்த இடத்தில் பண்ணுவதற்கு சம்மதம் வாங்குகிறார்கள். அங்கு எல்லா ஏற்பாடுகளும் நடைபெறும் பொழுது விஜய் என்னவென்று தெரியாமல் மாமியிடம் கேட்கிறார். மாமி நர்மதா பொண்ணு வயசுக்கு வந்துவிட்டது என்று சொல்லிய நிலையில் விஜயும் மாமன் சீரே கொண்டுவந்து அசத்தனும் என்று முடிவெடுத்து விட்டார்.

அந்த வகையில் நர்மதாவின் ஃபங்ஷனுக்கு மாமன் சீரோடு கெத்தாக வந்து விஜய் என்ட்ரி கொடுக்கப் போகிறார். மேள தாளத்துடன் ஆட்டம் பாட்டம் என விஜய் அசத்தும் சம்பவத்தை பார்த்து சாரதா வாய் அடைத்து போய் நிற்கப் போகிறார்.

Advertisement Amazon Prime Banner

Trending News