தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஹைதராபாத்தில் எடுக்க வேண்டிய பட காட்சிகள் தற்போது சென்னையிலேயே ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.
அதிரடி ஆக்சன் கதையாக உருவாகி வரும் லியோ படம் பிரபல ஹாலிவுட் படமான ‘ஏ ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ்’ என்னும் படத்தின் கதையின் தழுவல் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இது சம்பந்தமாக சொல்லவில்லை. ஆக்சன் கிங் அர்ஜுன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்ற அப்டேட் மட்டும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
Also Read:அஜித் விஜய்க்கு அடுத்த வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் வாய்ப்பு இழந்த விக்ரம்
ஏற்கனவே இந்த படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் இயக்குனர் கௌதம் மேனனுக்கு படம் முழுக்க விஜய் உடன் பயணிப்பது போன்ற கேரக்டர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லியோ படத்தை பொருத்தவரைக்கும் அவ்வப்போது சுட சுட அப்டேட்டுகள் வெளியாகி விஜய் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் படங்களை பொறுத்த வரைக்கும் எப்போதுமே காதல் காட்சிகள் மற்றும், அறிமுக பாடல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் லியோ படத்தில் பிரம்மாண்டமாக ஒரு பாடல் காட்சியை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு மட்டும் 2000 டான்ஸர்களை ஆட வைக்க வேண்டும் என்பதுதான் படகு குழுவின் மிகப்பெரிய மாஸ்டர் பிளான். கண்டிப்பாக இதை தியேட்டரில் பார்க்கும் பொழுது ரொம்பவே பிரம்மிப்பாக இருக்கும்.
Also Read:விஜய் அண்ணாவை புடிச்சி தொங்குனது போதும்.. ஷாருக்கான்-ஐ குருவாக ஏற்றுக் கொண்ட அட்லீ.!
2000 டான்ஸர்கள் என்னும் பொழுது கண்டிப்பாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களில் இருக்கும் டான்ஸர்களையும் வர வைக்கலாம் என்று தயாரிப்பு குழுவும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் தளபதி விஜய் அதெல்லாம் எதுவுமே தேவையில்லை டான்ஸர்கள் எல்லோரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கட்டும். ஆள் இல்லை என்றால் நடனப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அழைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் இந்த அனுபவம் அந்த மாணவர்களுக்கும் ஒரு உற்சாகத்தை கொடுக்கும் என்பதுதான் விஜய்யின் திட்டமாம். விஜய் இதுவரைக்கும் அவர் நடித்த படங்களில் படக்குழு திட்டமிடும் எந்த ஒரு விஷயத்திலும் தலையிட்டு தன்னுடைய கருத்தை சொல்ல மாட்டாராம். இதுதான் விஜய் முதல் முறை தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். இது தயாரிப்பு குழுவில் இருந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கூட ஆச்சரியமாக இருந்ததாம்.
Also Read:லியோ விஜய் ஃபேமிலி மெம்பர்ஸ்.. சாக்லேட் கம்பெனியாக மாறிய ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்