புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்க்கு இனிமேல் பாடமாட்டேன் என்ற எஸ்பிபி.. தளபதி இப்படி சொன்னா அப்புறம் யாரு தான் பாடுவாங்க?

தளபதி விஜய்க்கு இனிமேல் பாடல் பாட மாட்டேன் என எஸ் பி பாலசுப்ரமணியம் சொன்னதாக ஒரு தகவல் ஒன்று இணையத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு விஜய் சொன்னது தான் காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

தளபதி விஜய் நடிக்கும் படங்களில் பாடல்கள் எப்போவுமே முக்கியத்துவம் பெறும். அதுமட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் படங்களை காட்டிலும் விஜய் நடிக்கும் படங்களின் பாடல்கள் ரசிகர்களிடையே சீக்கிரத்தில் பிரபலமடையும்.

விஜய் ஒரு சங்கீத குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இசையில் அவருக்கு தனி ஆர்வம் உண்டு. இதனால் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் விஷயத்தில் அதிகம் தலையிடுவாராம். அதுவும் ஆரம்ப கட்டத்தில் விஜய் படங்களில் பாடல்கள் ஹிட்டானதற்கு அவரும் ஒரு காரணம்தான்.

மேலும் பல படங்களில் தனக்கு தானே குரல் கொடுத்து பாடியும் உள்ளார். ஏன் சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் ஒரு பாடல் பாடினார். அடுத்ததாக தளபதி 65 படத்திலும் ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் பாடுவதற்காகவே பிறவி எடுத்து வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் பிரியமானவளே படத்திற்கு பிறகு விஜய்க்கு இனிமேல் பாட மாட்டேன் என கூறி விட்டாராம். பிரியமானவளே படத்தின்போது ஒரு பாடல் பதிவேற்றப்பட்டது. ஆனால் அந்த பாடலை விஜய் பாடி நடிக்கும்போது ஒரு வயதானவர் குரல் போல் இருந்ததாக கூறினாராம் தளபதி.

பின்னர் அதே பாடலை வேறு ஒரு பாடகரை பாடவைத்து பின்னர் படமாக்கினார்களாம். அந்த படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் குரல் தனது செட் ஆகாது என விஜய் ஓப்பனாக சொன்னதால் எஸ் பி பாலசுப்ரமணியம் இனி விஜய் படங்களில் பாட மாட்டேன் எனவும் தெரிவித்து விட்டாராம். மேலும் விஜய்க்கு என் குரல் செட் ஆகாது எனவும் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டாராம் எஸ் பி பாலசுப்ரமணியம்.

vijay-spb-cinemapettai-01
vijay-spb-cinemapettai-01

இதன் மூலம் இருவருக்கும் கருத்துவேறுபாடு எதுவும் ஏற்படவில்லை எனவும் விஜய் சொன்னதை புரிந்து கொண்டு மனதார இந்த முடிவை எஸ் பி பாலசுப்பிரமணியம் எடுத்ததாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாகவே ஜில்லா படத்தில் மோகன்லாலுக்கு குரல் கொடுத்து முதல் பாடல் பாடியிருந்தார் எஸ்பிபி. இவ்வளவு ஏன் எஸ் பி பாலசுப்ரமணியம் இறந்த போது பல முன்னணி நடிகர்கள் வர தயங்கிய நிலையில் தனி ஒரு ஆளாக தளபதி விஜய் வந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Trending News