என்னதான் மழை, புயல், வெள்ளம் வந்தாலும் அது ஒரு ஓரமா வந்துட்டு போகட்டும் எங்களுக்கு மூவி அப்டேட் தான் முக்கியம்னு நினைக்கிற பலர் இருக்காங்க. அவங்களுக்காகவே அடுத்தடுத்து படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன போலும். அந்த வகையில் தற்போது கோலிவுட்டே எதிர்பார்க்கும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் குறித்த ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகைகள் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை படம் குறித்த எந்த ஒரு தகவலையும் படத்தின் இயக்குனர் நெல்சன் வெளியிடாமல் மிகவும் சர்ப்ரைஸாக வைத்திருந்தார்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதுவும் இயக்குனர் நெல்சனே இந்த புகைப்படத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் டிரம்ஸ் வாசிப்பதை போல உள்ளது.

செம ஸ்டைலிஸ் லுக்கில் விஜய் உள்ளார். எல்லாருக்கும் வயதானால் அவர்களின் இளமை தோற்றம் மாறிவிடும். ஆனால் விஜய்க்கோ வயதாக ஆக இளமையும் அழகும் அதிகமாகி கொண்டே செல்கிறது என்று தான் கூற வேண்டும். மனுஷன் இந்த வயசுலயும் இவ்வளவு யங்கா இருக்காரே என புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாதி நடிகர்கள் டாக்டர் படத்தில் நடித்தவர்கள். டாக்டர் படக்குழுவை அப்படியே நெல்சன் பீஸ்ட் படத்திற்கு அழைத்து வந்து விட்டார் போல. அதனால் தானோ என்னவோ இந்த புகைப்படத்தை பார்க்கும் பல ரசிகர்கள் இது பீஸ்ட்டா? இல்லை டாக்டர் படத்தின் இரண்டாம் பாகமா என நகைச்சுவையாக கமெண்ட் அடித்து வருகிறார்கள். இன்னும் சிலரோ எங்க தலைவன பார்த்ததே போதும் என நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.