சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பீஸ்ட் படத்தில் இணைந்துள்ள மலையாள பட வில்லன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழ் சினிமாவில் ஆளே இல்லையா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலை வாரி குவித்தது. அதனை அடுத்து தற்போது நடிகர் விஜய் பீஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். மேலும் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் கூட பூஜா ஹெக்டே மூன்று மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் நடிகர் விஜய் அவரின் சூழ்நிலையைப் புரிந்து ஞாயிற்றுக்கிழமை அன்று கூட படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நடித்துக் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

shine tom chacko
shine tom chacko

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது அதன்பிறகு சென்னையில் படத்தின் பாடல் காட்சிகளை படப்பிடிப்பு நடத்தினர். தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தற்போது இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சென்னை விமானத்தில் சம்பந்தப்பட்ட காட்சி படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

தற்போது இப்படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்கள் நடிக்க உள்ளனர். இதில் ஒரு வில்லனாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிக்க உள்ளார். தற்போது இந்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் இப்படத்தில் 2 வில்லன்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல வில்லன்கள் வாய்ப்புகளை தேடி வரும் இந்த சூழ்நிலையில் மலையாளம், தெலுங்கு என்று தேர்வு செய்வது ஏன் என்பது போன்ற கேள்விகளும் கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

Trending News