விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பிற்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் தற்போது கோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் தொடங்கியது.
பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த இயலவில்லை. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

தற்போது தமிழகத்தில் கொரோனோ தொற்று குறைந்துள்ளதால் 100 பேர் வரை பங்குபெற்று சினிமா படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே படக்குழுவினர் ஜூலை 1ஆம் தேதி முதல் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதன்படி இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்டமாக பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி நடனம் அமைக்க உள்ளார் நடிகர் விஜயும், பூஜா ஹெக்டேவும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள். விஜயுடன் நடனமாட பூஜா ஹெக்டே பயிற்சி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
விஜய் ரசிகர்களுக்கு தொடர்ந்து அப்டேட்டுகள் கிடைப்பது மகிழ்ச்சி அளித்தாலும், ஒரு அப்டேட்டுக்காக வருடக் கணக்கில் காத்திருக்கும் அஜித் ரசிகர்களை நினைத்தால் பார்த்தால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறோம்.
மோஷன் போஸ்டர் இந்த வருது அந்த வருது என்று அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய வருகின்றனர். ஆனால் கண்டிப்பாக இந்த மாதம் வெளியிடுகிறார்கள்.