செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

அந்நியன் பட சாதனையை முறியடித்த விஜய்.. 275 நாட்கள் ஓடிய திரைப்படம்

தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக இருக்கும் நடிகர் விஜய்யின் திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம் கேரளாவில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபுதேவாவின் இயக்கத்தில் விஜய், அசின், நெப்போலியன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் போக்கிரி. முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த அந்த படத்தில் விஜய் போலீசாக நடித்திருப்பார்.

Also read:விஜய்க்கும் சேர்த்து கட்டளையிட்ட இயக்குனர்.. அவஸ்தையில் வாரிசு படக்குழு

விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் கலந்து வெளியான அந்த திரைப்படம் தமிழ்நாட்டில் 275 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. மேலும் வடிவேலுவின் காமெடியும் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது. இதன் மூலம் பிரபுதேவா இயக்குனராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த திரைப்படம் 146 தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. 60 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 15 தியேட்டர்களில் 175 நாட்களும், ஒரு தியேட்டரில் மட்டும் 275 நாட்களும் ஓடியது.

Also read:தமிழ் ராக்கர்ஸ்-க்கு வலை விரித்து விஜய்யை அசிங்கப்படுத்திய படக்குழு.. அப்படி என்னதான் கோவமோ!

அது மட்டுமல்லாமல் அப்போது கேரளாவில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே தமிழ் திரைப்படமாகவும் இது இருந்தது. இதன் மூலம் விஜய் கேரள பாக்ஸ் ஆபிஸை மிரள விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அவருக்கு மலையாள திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

அது மட்டுமின்றி தமிழில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்நியன் பட வசூலையும் போக்கிரி திரைப்படம் முறியடித்தது. இந்தப் படத்திற்கு பிறகு விஜய்யின் அடுத்தடுத்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் இப்படம் அவருடைய திரை வாழ்வில் முக்கிய திரைப்படமாகவும் இருக்கிறது.

Also read:அடுத்த ஹீரோயினை உறுதி செய்த லோகேஷ்.. வேகமெடுக்கும் தளபதி 67

- Advertisement -spot_img

Trending News