திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தளபதி விஜய் பிறந்தநாளுக்கு தந்தை கொடுத்த பரிசு.. வைரல் வீடியோ!

தளபதி விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் சூழ்நிலையில், அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

விஜய்யின் 47வது பிறந்த நாளுக்கு சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இலவசமாக சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியில் இறங்கியுள்ளார் எஸ். ஏ. சந்திரசேகர்.

ஏழைகளுக்கு கல்வி உதவி, ரத்த தானம், அன்னதானம் போன்ற நல்ல காரியம் செய்வது போன்று பிறந்தநாளுக்காக ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

https://youtu.be/TgQKre4KDOE

தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப காலமாக நினைத்துக்கொண்டிருந்த இந்த விஷயத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டேன்.

மக்கள் பாதுகாப்பிற்காக எல்லோர் வீட்டிலும் சிசிடிவி கேமரா இருந்தால் குற்றம் கொஞ்சம் குறையும், திருடர்கள் வருவதை தடுத்து நிறுத்தலாம் என்பது போன்ற சமூக அக்கறையில் இதை செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாவட்டத்திற்கு வீதம் 10 ஆயிரம் வீடுகளுக்கு குறைந்தது பத்தாயிரம் சிசிடிவி கேமரா கொடுக்க நினைப்பதாகவும். சிசிடிவி ஒரு கண் மாதிரி எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் எந்த தவறையும் கண்டுபிடித்து விடலாம்.

இதனால் நான்கு மாவட்டங்களில் இது போன்ற சிசிடிவி கேமராக்களை விஜய்யின் பிறந்தநாள் பரிசாக கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு பரிசை இப்படி ஒரு பிறந்தநாள் பரிசை கொடுக்கிறேன் என்பதை விட எனக்கு வேறு சந்தோசம் கிடையாது என்று எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

vijay-chandrasekar

Trending News