வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் படம்.. கட்சித் தலைவராக தளபதி எடுக்கும் அவதாரம்

ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அரசியல் தலைவராக தளபதி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. 50ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விஜய் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பல திட்டம் தீட்டி வருகிறார்.

இந்த பிறந்தநாள் அன்று முக்கியமான அரசியல் தலைவர்கள் சிலைக்கு மாலை இடும்படி விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் அறிவுரை கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவிருக்கிறார் விஜய்.

கட்சித் தலைவராக தளபதி எடுக்கும் அவதாரம்

மேலும் அவர் பிறந்த நாள் அன்று கோட் படத்தின் இரண்டாவது சிங்கள் வெளிவர இருக்கிறது. படத்தில் ஏற்கனவே விஜய் “விசில் போடு” பாடலை பாடியுள்ளார். இது தவிர இன்னொரு பாடலையும் பாடியதாக கூறப்படுகிறது.

ஜூன் 22 விஜய் பாடிய மற்றொரு பாடல் வெளிவர இருக்கிறது. இந்த பாட்டு வரிகள் விஜய்க்கு பிடித்திருந்ததால், வெங்கட் பிரபுவிடம் கேட்டு வாங்கி பாடியதாக பட குழுவினர் கூறுகின்றனர். இந்த வருடம் பிறந்த நாளை வெங்கட் பிரபு மற்றும் கோட் குழுவினருடன் கொண்டாடுகிறார் விஜய்.

இந்நிலையில் விஜய் நடித்து வசூல் ரீதியாக சக்க போடு போட்ட படம் பகவதி. இந்த படத்தை ஜூன் 21ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கின்றனர். ஏற்கனவே இப்படி விஜய்யின் கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்து நல்ல லாபத்தை பார்த்தார் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினம்

Trending News