வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிரச்சனை வரக்கூடாதுன்னு அந்த பட ரைட்சையும் வாங்கிய விஜய்.. மைனஸ் டிகிரியிலும் ஐஸ் வாட்டர் குடிக்கும் தளபதி

தளபதி 69 படம் எச் வினோத் இயக்குகிறார் அனைத்து விதமான ஆடியன்ஸ் தரப்பையும் இந்த படம் திருப்திப்படுத்த வேண்டும் என்பது விஜய் போட்ட ஆர்டர். இப்பொழுது இந்தப் படத்திற்கு தான் தளபதி, தெலுங்கு மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா படம் ஒன்றின் ரைட்சை வாங்கி இருக்கிறார்.

படம் ரிலீஸ் நேரத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக தளபதி ஆடும் ஆடு புலி ஆட்டம் தான் இது. பாலகிருஷ்ணன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் “ பகவந்த கேசரி”. இப்பொழுது விஜய் நடிக்கும் தளபதி 69 படத்திலும் சில காட்சிகள் அந்தப் படத்தை ஒத்துப்போயிருக்கிறது.

பாலகிருஷ்ணா மகள் கேரக்டரில் நடனப்புயல் ஸ்ரீலீலா நடித்திருப்பார்.அதை வைத்துத்தான் அந்த படத்தின் முழு கதையும் நகரும். இப்பொழுது தளபதி 69 பட கதையும் அதே தோரணையில் தான் இருக்கிறது.

தற்சமயம் எச் வினோத் இயக்கி வரும் தளபதி 69 படத்தில் மம்தா பஜுலு விஜய்யின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் இந்த படத்தின் கதையும் 30% அந்த கதை போல் இருக்கிறது.

இதனால் பிரச்சனை வரக்கூடாது என முன்னெச்சரிக்கையாக பகவந்த் கேசரி படத்தின் ரைட்சையும் வாங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே எச் வினோத் நேர்கொண்ட பார்வை படத்தின் ரீமேக்கில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

Trending News