எல்லா கண்டிஷனையும் தூள் தூளாக உடைத்த விஜய்.. லியோவுக்கு மட்டும் இப்படி மெனக்கெடுவது எதற்கு தெரியுமா.?

வாரிசு படத்திற்கு பிறகு விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முன்பு விஜய் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் படக்குழுவிடம் தனக்கான கண்டிஷனை பக்காவாக சொல்லிவிடுவார்.

ஆனால் லியோ படத்திற்கு அப்படிப்பட்ட எந்த கண்டிஷனையும் போடாமல் செயல்படுவது விஜய்யின் மற்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜய் படத்தில் கமிட் ஆகும் பொழுது பல கட்டுப்பாடுகளை விதிப்பார்.

Also Read: பரபரப்பாகி வரும் லியோ படத்தின் மீதமுள்ள நாட்கள்.. செடியூலுக்கு தயாராகி வரும் மும்மூர்த்திகள்

அதாவது மாதத்திற்கு 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு வருவேன். மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பில் இருக்க மாட்டேன் என இப்படி ஒவ்வொன்றாக வைத்திருப்பார். இதை யாருக்காவும் மாற்றிக்கொள்ள மாட்டார். ஆனால் லியோ படத்திற்கு அது தலைகீழாக மாறி உள்ளது.

காரணம் காஷ்மீருக்கு சென்ற படக்குழு, 60 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தியது. இவர் அங்கே 10 நாட்கள் கொடுக்கவில்லை. தொடர்ந்து முழு நேரமும் இடைவெளி இன்றி ஒத்துழைப்பு கொடுத்தார். சரி சென்னை வந்ததும் மாறிவிடும் என்று யோசித்தார்கள். ஆனால் சென்னை வந்தும் 50 நாட்கள் தொடர்ந்து கால் சீட் கொடுத்திருக்கிறார்.

Also Read: லியோ படப்பிடிப்பில் கடுப்பான லோகேஷ்.. விஜய்யிடம் ஸ்டிரிக்டா போட்ட கண்டிஷன்

இடைவேளை இன்றி படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதனை பிற தயாரிப்பாளர்களின் படத்தில் விஜய் செய்யவில்லை. ஆனால் லியோ படத்திற்கு மட்டும் ஏன் இப்படி மெனக்கெடுகிறார் என்று, இதற்கு முன்பு 100 கோடி செலவு செய்து படம் எடுத்தவர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இது என்ன எங்களுக்கு மட்டும் இப்படி, லியோ படத்திற்கு மட்டும் இப்படி என்று விஜய்யை வசை பாடுகின்றனர். மேலும் லியோ படத்தின் தயாரிப்பாளர் உடன் இணைந்து விஜய்யும் சேர்ந்து தான் இந்த படத்தை எடுத்து வருகிறார்கள் என்றும் மறைமுகமாக சொல்லப்படுகிறது. அதனால் செலவுகளை குறைக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Also Read: நட்புக்காக ரூட்டை மாற்றிய லோகேஷ்.. அடுத்ததாக எடுக்கப் போகும் புது அவதாரம்

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்