வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினி, அஜித்துக்கு கொக்கி போடும் விஜய் தம்பி.. பாட்ஷாவை தூக்கி சாப்பிட தயாராகும் ஸ்கிரிப்ட்

Rajini-Vijay-Ajith: சூப்பர் ஸ்டார் இப்போது பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். ஜெயிலர், லால் சலாமுக்கு அடுத்ததாக தற்போது அவர் தலைவர் 170-ல் பிஸியாக இருக்கிறார். இதற்கு அடுத்ததாக லோகேஷ் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் இணைய இருக்கிறார்.

இந்த சூழலில் விஜய் தன் சொந்த தம்பியாக கருதும் அட்லி சூப்பர் ஸ்டாருக்காக அட்டகாசமான ஒரு கதையை தயார் செய்திருக்கிறாராம். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இதை உறுதி செய்து இருக்கிறார். அதாவது நான் பாட்ஷா, தளபதி ஆகிய படங்களை பார்த்து தான் சினிமாவுக்கே வந்தேன்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் தீவிர வெறியன் என்பதை நான் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். ஆனால் அவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. இருந்தாலும் அவருக்காக சூப்பரான ஒரு கதையை நான் தயார் செய்து வைத்திருக்கிறேன்.

Also read: அஜித்துக்காக ஓடிவந்த ரஜினி.. கண்டும் காணாமல் கை கழுவிய விஜய்

அது பாட்ஷாவை விட பல மடங்கு மேலானதாக இருக்கும். ரஜினியும் எப்ப வேண்டுமானாலும் தயார் என்று சொல்லி இருக்கிறார். விரைவில் அவரிடம் கதையை சொல்லி இந்த கூட்டணியை உறுதி செய்வேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அஜித்தை இயக்க வேண்டும் என்பதும் அவருடைய ஆசை என தெரிவித்துள்ளார்.

அவரிடம் இரண்டு மூன்று முறை கதை சொல்ல நினைத்தும் அட்லியால் முடியாமல் போயிருக்கிறது. ஆனாலும் அவருக்காகவும் ஒரு கதை தயாராக இருக்கிறதாம். இப்படி இரு பெரும் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களை இயக்குவதற்கான பக்கா பிளானை அட்லி பக்காவாக போட்டிருக்கிறார்.

தற்போது ஜவான் வெற்றியால் குஷியாக இருக்கும் இவர் அடுத்ததாக விஜய், ஷாருக்கான் கூட்டணியில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அது ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என தெரிகிறது. ஆக மொத்தம் மிகப்பெரிய திட்டத்தை வைத்திருக்கும் அட்லி சூப்பர் ஸ்டாருடன் எப்போது இணைவார் என்ற எதிர்பார்ப்பை இப்போது ஏற்படுத்தி இருக்கிறார்.

Also read: இன்னுமா இந்த லியோவை தூக்கல.? விஜய், அஜித் பேன்ஸ்க்கு தியேட்டர் நச்சுன்னு போட்ட ஆஃபர்

Trending News