ஜெயிலரை பார்த்தபின் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா.?

Actor Vijay: கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கான சர்ச்சை வெடித்து கொண்டிருக்கிறது. தற்போது ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தில் உள்ள நிலையில் அடுத்ததாக விஜய்க்கு தான் இது என பலரும் கூறிவருகிறார்கள். இதன் ஆரம்ப புள்ளியாக விஜய்யின் வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தான் இருந்தது.

அதில் சரத்குமார் போன்ற பிரபலங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று மேடையில் பேசி இருந்தனர். இதனால் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்று வந்தது. அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தை பற்றி விஜய் ரசிகர்கள் மோசமாக விமர்சித்தும் வந்தனர்.

Also Read : ஹீரோவாக நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்.. ரஜினியின் படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற நடிகர்

இந்நிலையில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நெல்சன் மோசம் செய்து விட்டார் என ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். இப்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி இருக்கும் நிலையில் முதல் நாளே விஜய் இந்த படத்தை பார்த்து விட்டாராம். தளபதி படத்தைப் பார்த்த உடனே நெல்சனுக்கு போன் செய்து உள்ளார்.

கண்டிப்பாக ஜெயிலர் வெற்றி உறுதி என்று நெல்சனுக்கு வாழ்த்து கூறியிருக்கிறாராம். ஏற்கனவே ஜெயிலர் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் பேசிய நெல்சன், பீஸ்ட் படத்தை இயக்கும் போது ஜெயிலர் கதையை விஜய் இடம் கூறி இருக்கிறாராம். இப்போது ரஜினியிடம் இந்த கதையை கூறுமாறு விஜய் நெல்சன் இடம் கூறியிருந்தாராம்.

Also Read : பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் கொடுத்த ஜெயிலர் ரிவ்யூ.. பத்திரிக்கையாளர் ஷோவில் நடந்த கலாட்டா

அதேபோல் ரஜினிக்கும் இந்த கதை பிடித்து போக நெல்சனை லாக் செய்திருந்தார். இதற்கு முன்னதாக பீஸ்டு படம் தோல்வி அடைந்திருந்தாலும் நெல்சனை விடாமல், அவரது கேரியர் பாலாகி விடுமே என்பதற்காக ரஜினி ஜெயிலர் படத்தை இயக்க சம்மதித்தார். அதற்கான நியாயத்தை ஜெயிலர் படம் மூலம் நெல்சன் கொடுத்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் வெளியில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவருமே நட்புடன் தான் பழகி வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கழுவி ஊற்றி வந்தாலும் தளபதியே நெல்சனுக்கு போன் செய்து ஜெயிலர் படத்தை வாழ்த்தி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Also Read : ஜெயிலரில் கதையோடு ஒட்டாத 5 கதாபாத்திரங்கள்.. மில்க் பியூட்டியை வேஸ்ட் பீஸ் ஆக்கிட்டியே நெல்சா