செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கைகோர்க்க அழைப்பு விடுக்கும் விஜய்.. தலைவனாக போடும் புது வியூகம், பரபரக்கும் அரசியல் வட்டாரம்

Vijay Political Entry: தற்போது ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் விஜய் மீது தான் இருக்கிறது. ஏற்கனவே தன்னுடைய அரசியல் வருகைக்கான வேலையை அவர் ஆரம்பித்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக திரையுலகினர் மட்டுமில்லாமல் அரசியல் தரப்பினர் கூட காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதன்படி தற்போது கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை பதிவு செய்யும் வேலையில் விஜய் மும்முரமாக இருக்கிறார். அது மட்டுமின்றி மிகப்பெரிய அளவில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்துவதற்கும் வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. அதேபோல் தனியாக ஒரு ஆப் உருவாக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வரும் விஜய் தற்போது தன்னுடைய கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் புது வியூகம் ஒன்றை அமைத்திருக்கிறாராம். அதன்படி சமூகம் மீது அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் வரலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Also read: தளபதி விஜய் கௌரவத் தோற்றத்தில் நடித்த 3 படங்கள்.. பாலிவுட்டை கலக்கிய மாஸ் டான்ஸ்

அதன்படி மகளிர், ஒடுக்கப்பட்டோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அமைப்பின் நிர்வாகிகளுக்கு விஜய் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி தன்னுடைய அரசியல் வருகையை பலரும் எதிர்பார்க்காத படி சரியாக திட்டமிட்டுள்ளார் விஜய்.

அந்த வகையில் விஜய்யின் கட்சி அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் என்கின்றனர். மேலும் இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதனால் இப்போது சோசியல் மீடியா பெரும் பரபரப்பாக இருக்கிறது. அது மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உட்பட ரசிகர்கள் அனைவரும் இதை திருவிழா போல் கொண்டாடுவதற்கும் தயாராக இருக்கின்றனர். ஆக மொத்தம் விஜய்யின் இந்த அரசியல் பயணத்தால் முக்கிய கட்சிகளும் பரபரப்பாகி உள்ளது.

Also read: விஜய்க்கு தேவைப்படும் அத்தனை கோடிகள்.. கொடுக்கப் போகும் அந்த பெத்த கை யார்?

Trending News