வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

முழு எனர்ஜியுடன் வந்த விஜய்.. இனிமே இப்படித்தானாம், புது ஸ்டைலில் மேடையில் நடந்த சுவாரஸ்யம்

விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அந்த நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதாவது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் திருவிழா போல் நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத விஜய் நேற்று முழு எனர்ஜியுடன் வந்திருந்தார்.

ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகாட்டியபடியே அரங்கிற்குள் நுழைந்த விஜய் படு கேஷுவலாக வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சாதாரண உடையில் அவர் வந்த விஷயம் தான் இப்போது சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து அவர் மேடை ஏறிய போது ரசிகர்களின் கைதட்டலால் விழா அரங்கமே அதிர்ந்தது.

Also read: பாடல் வரி மூலம் பதிலடி கொடுக்கும் விஜய், அஜித்.. பற்றி எரியும் சோசியல் மீடியா

மேலும் ரசிகர்கள் தங்கள் மொபைலில் டார்ச்சை ஆன் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கு முன்பு கூட விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் இதுபோன்று ரசிகர்களின் ஆரவாரம் இருக்கும். ஆனால் இந்த முறை அது பல மடங்காக இருந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் தலைவா தலைவா என்று அவர்கள் போட்ட கோஷமும், விஜய்க்கு கொடுத்த வரவேற்பும் என வாரிசு ஆடியோ பங்க்ஷன் களை கட்டியது.

அதில் படு சுவாரஸ்யமான ஒரு விஷயமும் நடைபெற்றது. அதாவது ரசிகர்களுடன் உரையாட மேடை ஏறிய விஜய் மிகவும் சந்தோஷத்துடன் தன் பேச்சை தொடங்கினார். அதற்கு முன்பாக அவர் ரசிகர்களை பார்த்து பறக்கும் முத்தங்களை வாரி வழங்கியது தான் விழாவின் ஹைலைட்டே. இதனால் ரசிகர்கள் படு உற்சாகமடைந்தனர்.

Also read: வாரிசு ஆடியோ லாஞ்சில் பங்கேற்க போகும் 2 முக்கிய புள்ளிகள்.. இப்பவே ப்ரமோஷனை ஆரம்பித்த தளபதி

ஒவ்வொரு பக்கமாக திரும்பி ரஞ்சிதமே ஸ்டைலில் பறக்கும் முத்தங்களை கொடுத்து வந்த விஜய் கிரிக்கெட் விளையாடும் ஸ்டைலிலும் முத்தங்களை கொடுத்தார். மேலும் இனிமேல் இந்த ஸ்டைலில் தான் என் மீது அன்பு கொண்டுள்ள உங்களுக்கு முத்தங்களை கொடுப்பேன் என்று அவர் கூறியவுடன் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதை நிச்சயம் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

மேலும் ரசிகர்களுடன் பல விஷயங்கள் குறித்தும் பேசிய விஜய் வாரிசு படத்தை பற்றியும் தெரிவித்தார். தற்போது விஜய் மேடையில் ரசிகர்களுக்கு கொடுத்த முத்தம் தான் ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் விஜய் அரசியல் களத்தில் குறிக்க தயாராகி விட்டார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி இன்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Also read: தளபதியுடன் ஜோடி போட்டும் செல்லுபடி ஆகல.. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிளாப்

Trending News