புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பொதுவெளியில் மறைத்து பேசும் இளையதளபதி.. விஜய் குடும்பத்தில் இருக்கும் வெளிவராத பிரச்சனைகள்

விஜய் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் சில வருடங்களாக பிரச்சினைகள் இருந்து வருகிறது. இதன் காரணமாக விஜய் வெளிப்படையாக தனது ரசிகர்களுக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். எனது அப்பாவிற்கு எனது கட்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவருடன் ரசிகர்கள் தொடர்பில் இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

பின்னர் விஜய் தந்தையிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார் தனியாக வேறு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பல பிரபலங்கள் சந்திரசேகரின் நண்பரான கங்கை அமரன் கூட விஜய் விமர்சனம் செய்திருந்தார். விஜய்யின் வளர்ச்சி எஸ் ஏ சந்திரசேகர் இல்லாமல் கிடையாது. ஆகையால் விஜய் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு பேச வேண்டும் என்று பல பிரபலங்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போதைய சந்திரசேகருக்கு 80 வயது பூர்த்தி அடைந்த நிலையில். திருக்கடையூர் சென்று தனது மனைவியுடன் ஆயுள் விருத்தி ஹோமம் செய்தனர். சிறப்பு வழிபாடு நடத்தி விஜய் பெயரில் அர்ச்சனை செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முக்கியமானதாக இந்த திருமணம் நடைபெறும் பொழுது மகன், மருமகள், பேரன், பேத்தியுடன் மட்டுமே செய்ய வேண்டும்.

இவற்றுக்கு மாறாக தனியாக எஸ் ஏ சந்திரசேகரன், ஷோபாவும் செய்தது அனைவரையும் கலக்கம் அடையச் செய்துள்ளது. இதுவரை கண்டுகொள்ளாத விஜய் இது பற்றி பேசவும் இல்லை. ஒரு பேட்டியில் சோபா அவர்கள் விஜய்யை மாதம் ஒரு முறையாவது எங்களை பார்த்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் .

கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ள விஜய் இப்படி பெற்ற தாய் ,தந்தையை மதிக்காமல் இருப்பது அவரின் ரசிகர்களேயே வெறுக்க செய்யும் அளவிற்கு நடந்து கொள்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். அனைத்து ரசிகர்களுக்கும் எடுத்துக்காட்டாகக் இருக்கு வேண்டும் விஜய். இல்லை என்றால் இவரது வளர்ச்சி பாதிக்கக்கூடும்.

ஆனால் விஜய் சன் டிவி அளித்த பேட்டியில் கூட தனது தந்தையை பற்றி பெருமையாகப் பேசினார். அதாவது அப்பாதான் ஒரு குடும்பத்தின் ஆணிவேர், அப்பாவை புரிந்துகொள்ள முடியாது ஆனால் நாம் அப்பாவாக மாறும் போது அவர்களின் பாசம் புரிந்துகொள்ள முடியும் மேலும் கடவுளுக்கும் அப்பாவிற்கும் உள்ள வித்தியாசம் கடவுளை பார்க்க முடியாது ஆனால் அப்பாவை பார்க்க முடியும் என கூறியிருந்தார்.

Trending News