வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தளபதி 69ல் விஜய் கதாபாத்திரம்.. ரஜினி போல் அவதாரம் எடுக்கும் பழைய போக்கிரி

எச் வினோத் இயக்கும் தளபதி 69 படம் எந்த மாதிரியான கதை என்பது தான் இப்பொழுது விஜய் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு. எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் இது பிடிக்க வேண்டும் என ஏற்கனவே விஜய், வினோத்திடம் கூறியிருக்கிறார்.

இந்த கதை விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு உருவான கத்தி படத்திற்கு பின் எச் வினோத் சொல்லிய கதையாம். ஆனால் அது இன்று வரை கிளிக் ஆகாமல் இழுத்துக் கொண்டே போய் உள்ளது. இப்பொழுது உள்ள நிலைமைக்கு ஏற்றவாறு கதையை மாற்றியமைக்க சொல்லி இருக்கிறார் விஜய்.

தளபதி 69இல் விஜய் பழைய போக்கிரி படத்தில் வருகின்ற மாதிரி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம். ஆனால் 50 வயதை தாண்டிய கதாபாத்திரம் தான் வேண்டுமென கூறியுள்ளார். லியோ மற்றும் வாரிசு போல் இளம் வயது விஜய்யை இதில் பார்க்க முடியாதாம்.

ரஜினி போல் அவதாரம் எடுக்கும் பழைய போக்கிரி

ஜெயிலர் படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற பின் மகனுக்காக மீண்டும் டிடெக்டிவ் மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் அதேபோல் பிரச்சனை காரணமாக போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் இந்த படத்தில் மீண்டும் ஒரு கேசுக்காக பொறுப்பேற்று கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

கோட் படத்தை போல இதிலும் 50 பிளஸ் வயது கடந்த கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் டிடெக்டிவாக கதை கலந்த ஒன்றாய் தளபதி 69 இருக்குமாம். ஏற்கனவே எச். வினோத் டிடெக்டிவ் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். போக்கிரி, தெறி போல் விஜய்க்கு அடுத்த போலீஸ் கதாபாத்திரமும் ரெடியாகி வருகிறது.

Trending News