வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

அதிமுக+தவெக, பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை, மாஸ்டர் மைண்ட் ஆதவ் அர்ஜுனா.. விஜய் வைத்த செக்

Vijay: ஒருத்தர் தண்ணிக்கு இழுத்து, இன்னொரு தரைக்கு இழுத்தா எப்படி என்று பேச்சு மொழியில் சொல்வது உண்டு. பேச்சு வார்த்தையில் இருக்கும் இருவருமே முரண்டு பிடிப்பதற்கு தான் இதை சொல்வார்கள்.

அப்படி ஒரு விஷயம் தான் அதிமுக கட்சிக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் நடந்து வருகிறது.

பிரசாந்த் கிஷோர் தளபதி விஜய்யை சந்தித்தபோதே 2026 சட்டமன்றத் தேர்தலின் வேலைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

இது அத்தனைக்கும் மாஸ்டர் மைண்டாக சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா இருக்கிறார்.

தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதிமுக கட்சி 60 சீட்டுகளோடு, துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க தயாராக இருக்கிறார்களாம்.

விஜய் வைத்த செக்

ஆனால் தமிழக வெற்றி கழகம் 234 சட்டமன்ற தொகுதியில் பாதிக்கு பாதி 117 சீட்டுகள் கேட்டு இருக்கிறது. அதே மாதிரி பதவி காலத்திலும் பாதிக்கு பாதி தான்.

இரண்டரை வருஷம் விஜய் முதலமைச்சராக இருப்பார் என்ற நிபந்தனையையும் போட்டு இருக்கிறதாம்.

இதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிபந்தனையை 60 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கும் அதிமுக கட்சி ஏற்குமா என்பது பெரிய சந்தேகம்.

இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ஒன்றிணையும் சாதகம் நடந்து வருகிறது.

இதில் விஜய்யும் சேர்ந்தால் தமிழக அரசியலில் கண்டிப்பாக வேறு ஒரு மாற்றம் ஏற்படலாம். ஆனால் விஜய் கொடுத்திருக்கும் நிபந்தனை தான் இப்போது இந்த திட்டத்தை பெரிய கேள்விக்குறி ஆக்கி இருக்கிறது.

Trending News