Vijay: விஜய்யை இங்க பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க என்று அவருடைய சித்தப்பா ஒரு பேட்டியில் பதிலளித்திருக்கிறார்.
இந்த விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. விஜய் லியோ படம் முடித்த கையோடு அவரைப் பற்றி பரவிய வதந்தி தான் விவாகரத்து.
விஜய் மனைவி சங்கீதா அவரை பிரிந்து விட்டதாக செய்திகள் பலவிதமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
விஜய்யின் சித்தப்பா சொன்ன பதில்
இதற்கு காரணம் விஜய்யின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் இருக்கும் சங்கீதா சமீப காலமாக ஆப்சென்ட் மோடில் இருப்பது தான்.
இது குறித்து விஜயின் சித்தப்பா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் அவரிடம் விஜய் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது என்று கேட்கிறார்கள்.
அதற்கு பதில் அளித்த அவர் அந்த விஷயம் முற்றிலும் பொய். விஜயின் மகன் அமெரிக்காவில் படித்தது போல் தற்போது மகள் லண்டனில் படித்து வருகிறார்.
பெண் பிள்ளை என்பதால் அவருடன் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சங்கீதா லண்டனில் தங்கி இருக்கிறார்.
விஜய்யை இங்க பாத்துக்க ஆயிரம் பேர் இருப்பாங்க. ஆனால் பெண் பிள்ளையை அம்மா பக்கத்தில் இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம் தானே. அதனால்தான் சங்கீதா லண்டனில் தங்கி இருக்கிறார் என பதிலளித்திருக்கிறார்.