வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

விஜய் முதல்ல அரசியலுக்கு வரட்டும்.. அப்புறம் சொல்றேன்.. தளபதி பற்றிய கேள்விக்கு கௌதமி ஓபன் டாக்

விஜய் அரசியலில் குதித்துள்ள நிலையில் அவர் அரசியல் வருகை பற்றி பிரபல நடிகை கருத்து தெரிவித்துள்ளார். சினிமாவில் எல்லா நடிகர்களும் நடிக்கும் எல்லா படங்களும் வெற்றி பெறுவதில்லை. அப்படி ஹிட்டிக்கும் படங்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் பெறுவதுமில்லை.

ஆனால் நடிகர் விஜய் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் தனி வரவேற்பை பெற்று வசூலை வாரி குவிக்கும், அவருக்கு தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா என பரவலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களின் பலத்துடன், தனக்கு உள்ள நல்ல இமேஜுடன் அவர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர முடிவெடுத்தார்.

விஜய் மீதான மீதான விமர்சனம்

அதன்படி, கடந்த பிப்ரவரி தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் தனது இலக்கு எனவும் அதற்காக உழைக்கப் போவதாவும் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட படங்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்தார்.

அதன்பின்னர், தவெக கொடியும், கொடிப்பாடலும் வெளியிட்டு மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்தார். இப்படி பார்த்து பார்த்து தனக்கான இளைய பட்டாளத்துடன், நிர்வாகிகளுடன் இணைந்து திட்டம் போட்டு விஜய் செயல்பட்டாலும் அவர் ஆளும் கட்சிக்கு எதிராக மத்தியிலும் சரி மா நிலத்திலும் சரி ஆளுங்கட்சிக்கு எதிராக விமர்சிப்பதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதேபோல் அவர் மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும், மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டு அரசியல் செய்ய கூடாது என பலரும் விமர்சித்தனர். அதேபோல் அவர் இன்னும் சினிமாவில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் எப்படி அரசியலில் வெற்றி பெறுவார்? என்று பலரும் கூறினாலும், வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கும் முதல் மா நாட்டில் அவர் தன்கொள்கைகள், அரசியலுக்கு வந்தது ஏன் என்பது பற்றி விளக்கமாக தொண்டர்களுக்கும் தன்னைக் கிண்டலடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் பதில் அளிப்பார் என தெரிகிறது.

விஜய் அரசியல் வருகை பற்றி கவுதமி ஒபன் டாக்

இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகை பற்றி ஏற்கனவே அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பதிலளித்த நிலையில் நேற்று பாஜகவில் இருந்து விலகி, எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்படி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் இணைந்தார் நடிகை கவுதமி. அவருக்குக் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை கவுதமியிடம் விஜய்யின் அரசியல் வருகை பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அவர்: ’’இதுவொரு ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் மக்கள் பணியில் ஈடுபடலாம் அதற்கான தேவையும், அவசியலும் இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துவிட்டு சொல்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், ’’அதிமுகவின் இப்பதவி கொடுத்தது பற்றி இப்பதவியுடன் நிறைய பொறுப்புகளும் உள்ளன. அதைப் புரிந்துகொண்டு முழுதாக நியாயம் செய்ய முடியும் என்று இப்போது’’ கூறுவதாக தெரிவித்துள்ளார். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி, கமல், சத்யராஜ், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்தார். விஜய் டிவியில் டான்ஸ் ஷோவில் நடுவராக இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தகக்து.

Trending News