Thalapathy Vijay: நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. வி சாலை எனும் விவேக சாலையில் நேற்று சிங்கம் போல் கர்சித்திருந்தார் தளபதி. தன்னுடைய கட்சி கொள்கை என்ன, யாரெல்லாம் தனக்கு அரசியல் எதிரில் என அத்தனையையும் புட்டு புட்டு வைத்தார்.
அத்தோடு தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும்போது தான் தெரிகிறது, அட! இது அதுல என்று.
திமுக தான் தனக்கு எதிரி என்று சொன்ன விஜய் அந்த கட்சியின் கொள்கையுடன் சமரசம் செய்திருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அண்ணா கொள்கையை திமுக பின்பற்றுவது போல் இனி தவெக வும் பின்பற்ற இருக்கிறது.
அட! இதான் பா பயங்கரமான டிவிஸ்ட்
திமுக மத நம்பிக்கை, பக்திக்கு எதிராக நிற்காது. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தவெக கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. மதசார்பின்மை, சமூக நீதியை கொள்கையை திமுக பின்பற்றுவது போல் மதசார்பற்ற சமூக நீதிக் கொள்கையே எங்கள் கொள்கை என விஜய் சொல்லி இருக்கிறார்.
ஆளுநர் பதவியே தேவையில்லை என திமுக கட்சி சொல்ல அதையே வழி மொழிந்திருக்கிறார் விஜய். திமுக கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து அந்த கட்சி வலியுறுத்துவது மாநில சுயாட்சி. அதையே தான் விஜய் மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளை மீட்டெடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை உரைத்து சொல்கிறது திமுக கட்சி. அதேபோன்றுதான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியும் தமிழ் ஆங்கிலம் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவோம் என சொல்லி இருக்கிறது.
தமிழகத்தில் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது திமுக கட்சி. அதே போன்று தான் விஜய்யும் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என சொல்லி இருக்கிறார். திமுக கட்சியும் தவெக கட்சியும் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை எடுத்துரைக்கிறது.
கிட்டதட்ட திராவிட முன்னேற்றம் கழகம் கட்சியின் கொள்கையும், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார் என 2026 தேர்தல் களத்தில் பார்க்கலாம்.