ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விஜய் போட்ட ஒப்பந்த கல்யாணம், அதிர்ச்சியில் குடும்பம்.. வெண்ணிலாவை சீண்டிவிடும் ராகினி, கர்ப்பமாகும் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஒழுங்கா போயிட்டு இருந்த கதையில் குறுக்கே வந்த கௌசிக் போல விஜய் மற்றும் காவிரியின் சந்தோசமான வாழ்க்கைக்குள் வெண்ணிலா புகுந்து பூகம்பமாக மாறிவிட்டார். அதாவது வெண்ணிலா இருக்கும் இடத்தை காவிரிக்கு காட்டிக் கொடுத்து தினம் தோறும் ராகினி, காவிரியை டார்ச்சர் பண்ணி வந்தார்.

அதனால் காவேரி, விஜய் பற்றி நமக்குத் தெரியும் எந்த காரணத்தைக் கொண்டும் நம்மை விட்டு போக மாட்டார் என்ற நம்பிக்கையில் வெண்ணிலாவை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார். விஜய், வெண்ணிலாவை பார்த்த அந்த ஒரு தருணத்தில் சந்தோஷப்பட்டு கொண்டாலும் நம்முடைய மனைவி இனி காவிரி தான் என்ற மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டார்.

இருந்தாலும் நாம் பார்த்து காதலித்த பொண்ணு இப்படி ஒரு நிலைமையில் தவிக்கும் பொழுது நம்மளால் முடிந்தவரை ஏதாவது உதவி பண்ண வேண்டும் என்று வெண்ணிலாவுக்கு சிகிச்சை உதவி செய்து வருகிறார். ஆனால் இதற்குள் புகுந்த ராகினி, வெண்ணிலவை சீண்டி விட்டு காவேரி வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்தும் விதமாக சில தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார்.

அந்த வகையில் வெண்ணிலாவுக்கு சுயநினைவு வந்த பிறகு கூட டிராமா போட்டு நடித்து வருவது போல் தெரிகிறது. இந்த சூழ்நிலையில் விஜய் மற்றும் காவேரி ஒப்பந்த கல்யாணம் போட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது என்ற விஷயம் வெளிவந்துவிட்டது. நவீன், யமுனாவிடம் சொன்ன ரகசியத்தை குடும்பத்தில் இருப்பவர்களிடம் போட்டு உடைக்கும் விதமாக யமுனா ஒப்பந்த கல்யாணத்தை பற்றி சொல்லிவிடுகிறார்.

இதனால் காவேரி வாழ்க்கை என்னவாக போகுது என்ற கேள்விக்குறி இருக்கிறது. இதற்கிடையில் விஜய், காவிரிக்கு சர்ப்ரைஸ் பண்ணும் விதமாக ஆபீஸில் எம்டி பொறுப்பை கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லி கொடைக்கானலில் தனியாக இருந்து மனம் விட்டு பேசலாம் என பிளான் பண்ணி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் காவிரி குடும்பத்திற்கு தெரிந்த உண்மையால் விஜய் இடம் நியாயம் கேட்க போகிறார்கள்.

அந்த வகையில் இந்த உண்மை ராகினிக்கும் தெரிந்துவிடும், உடனே ராகினி இந்த விஷயத்தை வைத்துக் கொண்டே வெண்ணிலாவின் மனசில் விஷத்தை புகுத்தி காவிரிடமிருந்து விஜய்யை நிரந்தரமாக பிரிப்பதற்கு பிளான் பண்ணி விடுவார்கள். ஆனால் இதில் தான் ஒரு திடீரென்று எதிர்பாராத திருப்பம் ஒன்று நடைபெறப் போகிறது.

அதாவது விஜய் மற்றும் காவிரி ஒன்றாக புரிந்து கொண்ட தருணத்தில் இருவரும் சேர்ந்த விதமாக காவிரி கர்ப்பமாக போகிறார். அதனால் விஜய் மற்றும் காவிரியை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்ப இருவரும் ஒன்று சேர போகிறார்கள்.

Trending News