வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்யை தேடிய பாட்டி, ஓவர் ஆக்டிங் செய்த புஸ்ஸி.. தளபதி செய்த தரமான சம்பவம்

Actor Vijay: கேப்டன் விஜயகாந்த்துக்கு இறுதி மரியாதை செய்ய வந்த விஜய்க்கு உச்சகட்ட அவமானம் நடந்தது. இருந்தாலும் தன்னுடைய இறுதி அஞ்சலியை அவர் செலுத்தினார். அதை அடுத்து இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு அவர் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

அப்போது அந்த நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம் தான் இப்போது வைரலாகி வருகிறது. இன்று காலை தனி விமானத்தின் மூலம் தூத்துக்குடி சென்ற விஜய் அங்கு மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

அப்போது ஒரு பாட்டி விஜய் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார். உடனே விஜய் நான் தான் பாட்டி என அவரை அன்போடு அழைத்து பொருட்களை வழங்கினார். அப்போது அவர் விஜய்யை தொட்டு தடவி பாசத்துடன் பேசினார்.

Also read: கேப்டனை பார்க்க தவியாய் தவித்த விஜய்.. விஜயகாந்தை தனிமைப்படுத்தி கண்ட்ரோலில் வைத்திருந்த குடும்பம்

ஆனால் அருகில் இருந்த புஸ்ஸி ஆனந்த் அங்கு இருப்பவர்களிடம் பாட்டியை இங்கிருந்து கூட்டிட்டு போ என கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். உடனே கடுப்பான விஜய் அவரை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு சுற்றி இருந்தவர்களையும் ஓரமாக நில்லுங்கள் என கூறினார்.

மேலும் மக்கள் வருவதற்கு ஏற்ப இடத்தை வசதி செய்து கொடுத்து கூல் கூல் என அமைதிப்படுத்தினார். மேலும் ஓவர் ஆக்டிங் செய்த புஸ்ஸி ஆனந்தையும் அடக்கி வைத்தார். இதனால் புஸ்ஸி வேறு வழியில்லாமல் வாயை மூடிக்கொண்டார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

2026 தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தி வரும் விஜய் தன் அரசியல் அஸ்திவாரத்தை நங்கூரம் போல் போட்டு இருக்கிறார். ஆனால் இந்த புஸ்ஸி ஆனந்த் தேவையற்ற வேலைகளை செய்து ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விடுகிறார். தற்போது விஜய் எல்லார் முன்னிலையிலும் அவரை கண்டித்து இருப்பது பாராட்டப்பட்டு வருகிறது.

Also read: தளபதி-68 படத்தில் விஜய்க்கு இருக்கும் ஏகப்பட்ட பிளஸ்கள்.. எல்லாருமே அந்த ஒரு சீனுக்காக தான் வெயிட்டிங்

Trending News