திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

22 வருடத்திற்கு முன்பே நடிப்பை தூக்கி எறிய முடிவெடுத்த தளபதி .. கோலிசோடா விஜய் மில்டன் கூறிய சுவாரஸ்யமான சம்பவம்

தளபதி விஜய் தற்போது கோலிவுட் சினிமாவின் ஒரு தகர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசையாக இருந்து வந்தது. தன் தந்தையான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் போராடி அனுமதி வாங்கி தான் விஜய் சினிமாவுக்குள் வந்தது. இன்று அவரே நினைத்தாலும் சினிமாவை விட்டு விலக முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகு விஜய்க்கு திரும்பி பார்க்க கூட நேரம் இல்லாத அளவுக்கு அடுத்தடுத்து வெற்றிகள் குவிந்த வண்ணம் இருந்தன. விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் நெஞ்சினிலே திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் தான் விஜய் மில்டன். இவர் தற்போது நடிகர் விஜய் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சொல்லி இருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியான விஷயமாகத்தான் இருக்கிறது.

Also Read:எத்தனை தடவை டிவியில் போட்டாலும் சலிக்காத 5 படங்கள்.. விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்திய 90ஸ் கிட்ஸ் படம்

விஜய் அந்த படப்பிடிப்பு சமயங்களில் விஜய் மில்டனுடன் நெருங்கி பழகி இருக்கிறார், அந்த நேரத்தில் தன்னுடைய நிறைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்ட விஜய், தான் 2000 வருடத்தில் இருந்து சினிமாவில் இருந்து விலகி விடப் போவதாக சொல்லி இருக்கிறார். இது விஜய் மில்டனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஏன் இப்படி கூறுகிறார் என கேட்டிருக்கிறார்.

அதற்கு விஜய் தனக்கு சினிமா இயக்குவதிலேயே விருப்பம் அதிகமாக இருப்பதாகவும், நான் ஒரு இயக்குனராக ஆசைப்படுவதாகவும் அதனால் நடிப்பிலிருந்து விலக யோசித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அதற்கு விஜய் மில்டன் நீங்கள் இப்போது முன்னணி ஹீரோ, நன்றாக வளர்ந்து வருகிறீர்கள் இந்த நேரத்தில் நீங்கள் சினிமாவில் இருந்து விலகப் போவதாக சொன்னால் ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:விஜய்யை வைத்து கேவலமான விளம்பரம் தேடும் விஷால்.. பப்ளிசிட்டியா இல்ல பதவியா, உஷாரா இருங்க

இருந்தாலும் நான் நடித்தது போதும், இயக்குனர் ஆவது தான் என்னுடைய மிகப்பெரிய ஆசை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் விதிவசத்தால் இன்று விஜய் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிசின் அசைக்க முடியாத கிங்காக இருக்கிறார். அவருக்காக கோடிக்கணக்கில் ரசிகர்களும் இருக்கிறார்கள். இனி நினைத்தாலும் அவரால் சினிமாவை விட்டு ஒதுங்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இருந்தாலும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை மட்டும் அவருக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் அவரது ஆசையை தன் மகன் மூலம் நிறைவேற்ற போகிறார். கூடிய விரைவில் அவர் மகன் படம் இயக்குவார் என ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் கூறியுள்ளார். விஜய்யின் மகன் இயக்குனர் ஆக போகிறார் என்ற தகவல் சமீப காலமாகவே கோலிவுட்டில் உறுதியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

Also Read:விஜய்யுடன் கர்ஜிக்க மட்டும் 15 கோடியா.? தலை சுற்ற வைக்கும் லோகேஷின் மாஸ்டர் பிளான்

Trending News