வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்கு அஜித் சப்போர்ட் கண்டிப்பாக வேணும்.. சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர்!

Vijay VS Ajith: விஜய் சினிமாவை தாண்டி தீவிர அரசியல் இறங்குவது உறுதியாகிவிட்டது. அது எப்பொழுது என்று தான் தெரியவில்லை ஆனால் அதற்கான வேலைகளில் வேகமாகவும், வித்தியாசமாகவும் முயற்சித்து வருகிறார். அதே சமயத்தில் படங்களிலும் நடித்து வருகிறார். என்ன வித்தியாசமாக செய்தாலும் இவர் இன்னும் மாறவே இல்லை குறிப்பாக மக்களை சந்திக்கவில்லை.

ஒருவேளை கடைசி படத்தை அறிவித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக ஆன பிறகு மக்களை சந்திக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் நடிகர்களுடன் சண்டை போடுவதில் விஜய் தற்பொழுது துரிதமாக செயல்பட்டு வருகிறார். அதுவே பல பேருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய், அஜித் என்ற போட்டியை மாற்றி விஜய், ரஜினியுடன் மல்லு கட்ட ஆரம்பித்துவிட்டார்.

அதற்கு தகுந்த மாதிரி அஜித்தும் எனக்கு என்ன என்று அமைதி காத்து வருகிறார். இந்த செயல் விஜய்க்கு சாதகமாக மாறிவிட்டதால் அவர் ரஜினியுடன் போட்டி போட்டு வருகிறார். லியோ வெற்றி விழாவில் லியோ படத்தை விட்டு விட்டு அரசியல் பேசிய விஜய் அப்பொழுது எல்லா நடிகர்களையும் அவர்கள் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்க்க பல விஷயங்களை பேசினார்.

Also Read : விஜய்க்கு கை கொடுக்க வரும் ரஜினி, அஜித்.. இந்தியளவில் பரபரப்பாகும் முக்கிய புள்ளிகள்

ஆனால் என்ன பேசினாலும் எல்லா ரசிகர்களும் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள். குறிப்பாக ரஜினி ரசிகர்கள் ஓட்டு போடுவது சந்தேகம். அதேபோல் விஜய் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் முக்கியமாக அஜித்தின் சப்போர்ட் கண்டிப்பாக தேவை. அவர் இல்லாமல் தனியாக விஜயால் வெற்றிபெற முடியாது காரணம் ரசிகர்கள்.

அஜித் சொன்னாலும் விஜய்க்கு அஜித் ரசிகர்கள் ஓட்டு போடுவார்களா என்பது யோசிக்க வேண்டும். ஒருவேளை கட்சி அடிப்படையில் பார்த்தால் விஜய்க்கு ஓட்டு போட வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு அஜித் பேச வேண்டும் விஜய்க்கு தோழனாக சில விஷயங்களை செய்தால் மட்டுமே விஜய்க்கு எளிதாக இந்த விஷயம் அமையும். இரண்டு பேருமே அமைதி காத்து வந்தால் விஜய்க்கு தான் ஆபத்து. இல்லை விஜய் இறங்கி அனைத்து நடிகர்களும் நட்பு வண்ணம் பேசி அவர்களின் ஆதரவை பெற வேண்டும்.

விஜய் தனது செயல்பாடு மாற்றி பேசத் தொடங்க வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும் அனைத்து ரசிகர்களை கோபப்படுத்தாமல் இருக்க வேண்டும். அனைத்து பெரிய நடிகர்களின் ஆதரவை பெறவேண்டும். முக்கியமாக விஜய்க்கு கெட்ட பேர் வந்ததே ரஜினியுடன் போட்டி போட்டு பேசியது சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பல நாட்கள் பேசாமல் கடைசியில் பேசிய. இதையெல்லாம் சரி செய்தால் விஜயின் அரசியல் வாழ்க்கை ஒரு அளவிற்கு பிரகாசமாக மாற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.

Also Read : நங்கூரம் போல் போட்ட முதல் அஸ்திரம்.. விஜய்யிடம் இருந்து சீமானுக்கு பறந்த போன்

Trending News