வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் மறுத்த அந்த 2 விஷயங்கள்.. லோகேஷ் மற்றும் லலித்தை தூக்கி வாரி போட்ட சம்பவம்

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாக்கிக் கொண்டிருக்கும் லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் இரண்டு விஷயத்திற்கு விஜய் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இது படத்தின் இயக்குனர் லோகேஷ் மற்றும் தயாரிப்பாளர் லலித்திற்கு தூக்கி வாரி போட்டு இருக்கிறது.

லியோ செம எதிர்பார்ப்புகளுடன் உருவாகிக் கொண்டிருக்கிறது. காஷ்மீரில் விஜய் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். துப்பாக்கி படத்திற்கு அப்புறம் விஜய்யை இந்த படத்தில் வேறு ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார்கள்.

Also Read: இரண்டு பேரை கண்மூடித்தனமாக நம்பும் விஜய்.. இமையைக் காக்கும் கண்கள் போல் செயல்படும் செல்ல பிள்ளைகள்

இந்த படத்திற்காக விஜய்க்கு ஒரு பெருந்தொகையை சம்பளமாக கொடுக்கின்றனர். அதுமட்டுமின்றி படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கையும் விஜய்க்காக கொடுப்பதாக திட்டமிட்டு இருக்கிறார் லலித். ஆனால் விஜய் அதை மறுத்துவிட்டார். இந்த விஷயம் லலித்துக்கு பெரிய ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் லியோ படத்தின் மூலம் நல்ல லாபம் பார்த்து விடலாம், அதற்கு விஜய் முழு ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும். அவருடைய சொந்த தயாரிப்பில் லியோ படம் உருவாவது போன்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அதற்காகவே லாபத்தில் ஒரு பங்கை விஜய்க்கு கொடுக்க லலித் முன் வந்தார்.

Also Read: லியோ படத்தில் இணைந்த லெஜன்ட்.. காஷ்மீரில் இருந்து வெளியான பகிர் வீடியோ

ஆனால் விஜய் இதுவரை நடித்த எல்லா படங்களைப் போன்று இந்தப் படத்தையும் சிறப்பாக நடித்துக் கொடுப்பேன். இதற்காக எனக்கு எந்த ஷேரும் வேண்டாம் என்றும் மறுத்துவிட்டாராம். ‘பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்’ இந்த காலத்தில் பாக்ஸ் ஆபிஸின் நாயகனாக கோலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் விஜய், லலித் கொடுத்த ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டார்.

எனக்கு எதுவுமே வேண்டாம் நான் ஏற்கனவே வாங்கிய சம்பளத்தை மட்டும் தாருங்கள் போதும் என்று அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு பதிலை சொல்லி, திக்குமுக்காட வைத்திருக்கிறார் தளபதி விஜய்.

Also Read: 16 வருடத்திற்கு பின் மீண்டும் ஹீரோவாகும் முரட்டு வில்லன்.. லோகேஷ் கொடுத்த சான்ஸால் அடித்த ஜாக்பாட்

Trending News