எப்போதும் காரசாரமான படங்களை வெளியிடுவதில் கில்லாடி தெலுங்கு சினிமா தான். அந்த தெலுங்கு சினிமாவிலும் சாக்லேட் பாய் ஆக்சன் ஹீரோ என இரண்டையும் ஒரசேர செய்திடும் நடிகர் விஜய் தேவர்கொண்டா பற்றிய பதிவிது.
1989-ல் பிறந்த விஜய் தேவர்கொண்ட பிரபல சீரியல் இயக்குனரின் மகனாவார். இப்படியாக புகழின் வழியில் இருப்பவர்களுக்கு எளிதான முதல் வாய்ப்புகள் கிடைக்குமே ஒழிய மக்கள் மனதில் இடம்பெறுவது அவரவர் சொந்த முயற்ச்சியே.
பள்ளி படிப்பை முடித்த விஜய் தேவர்கொண்டா அடுத்து தன் கல்லூரி படிப்பை ஐதராபாத்தில் படித்தார். ஒரு காலத்தில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் இவரது பேங்க் அக்கவுண்ட் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். வெறும் 500 ரூபாய் இல்லாத காரணத்தால் வங்கியில் இவரை அவமதித்து உள்ளனர்.
ஆனால் தற்போது தெலுங்கு சினிமாவின் மூலம் இவரை தெரியாத ரசிகர்கள் கிடையாது என்று தான் கூற வேண்டும். 2011-ல் வெளிவந்த “நூவ்விலா” படத்தில் அறிமுகம் கண்ட விஜய் தேவர்கொண்டா அப்போதய சாக்லேட் பாயாக வலம் வர ஆரம்பித்தார்.
அடுத்த ஆண்டு வெளிவந்த “லைப் இஸ் ப்யூட்டிபுல்” விஜய் தேவர்கொண்டாவை அதே இடத்தில் நிலைநாட்டியது. இப்படியாக சாக்லேட் பாய்களின் ஜொலிப்பு தெலுங்கு சினிமாவில் மிக குறுகிய நாட்களே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை செதுக்கிய விஜய் ஆக்ஷன் படங்களில் களமிறங்கினார்.
ரஷ்மிகா மந்தனா உடனான கெமிஸ்ட்ரி பாராட்டப்படவே அடுத்தடுத்து “கீதா கோவிந்தம்””டியர் காம்ரேட்” என வரிசைகட்டி படம் கொடுத்தார். இப்படியாக வளர்ந்த விஜய் தேவர்கொண்டா இப்போது ஆக்சன் கமர்ஷியல் ஹீரோவாக மிரட்டி வருகிறார்.