வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சமந்தாவை விடாமல் துரத்தும் அந்தப் பிரச்சனை.. மேடையிலேயே உருகிய விஜய் தேவரகொண்டா!

Actress Samantha: தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை எல்லாம் தைரியமுடன் கடந்து வந்த சமந்தா சமீப காலமாகவே பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறார். அதிலும் ஒரு பெரும் பிரச்சனை அவருடைய திரை வாழ்வையே முடுக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.

அதைத்தொடர்ந்து இனிமேல் அவர் நடிக்க மாட்டார், அவருடைய மார்க்கெட் சரிந்து விட்டது என பல யூகங்கள் கிளம்பியது. ஆனால் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுச்சி பெற்ற சமந்தா தற்போது புத்துணர்ச்சியுடன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்திருக்கும் குஷி வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Also read: விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் புது லவ் மேஜிக்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த குஷி போஸ்டர்

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை திரையில் காணவும் ரசிகர்கள் இப்போது காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்து ஒரு மேடையில் வெளிப்படையாகவும், உருக்கமாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மயோசிடிஸ் பிரச்சனை சமந்தாவை எந்த அளவுக்கு விடாமல் துரத்தியது என்பதை பற்றி தெரிவித்திருந்தார். அதாவது குஷி படத்தின் ஷூட்டிங் பாதிக்கும் மேல் முடிவடைந்த நிலையில் சமந்தா தனக்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

Also read: காதலுக்கு ஓகே, அந்த விஷயத்துக்கு நோ.. விஜய் தேவரகொண்டா நினைப்பில் பாலை ஊற்றிய ஹீரோயின்

முதலில் அதைப் பற்றி சாதாரணமாக எடுத்துக் கொண்ட பட குழு பின்னாளில் சமந்தா பட்ட கஷ்டங்களை பார்த்து அதிர்ந்து போய் இருக்கின்றனர். அதாவது இந்த பிரச்சனை தனக்கு மரண வேதனையை கொடுத்ததாக சமந்தா ஒருமுறை வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார். அதைப் பற்றி கூறியிருக்கும் விஜய் தேவரகொண்டா, இப்போது உங்கள் முன் சமந்தா சிரித்தபடி இருந்தாலும் அந்தப் பிரச்சினை அவரை விட்டு முழுமையாக நீங்கவில்லை.

இப்போதும் கூட அதிகபட்ச லைட் வெளிச்சத்தின் காரணமாக அவருக்கு தலைவலி ஏற்படும். ஆனாலும் அவர் ரசிகர்கள் தன் மீது கொண்ட அன்பிற்காகவே இதையெல்லாம் புன்னகையோடு கடந்து வருகிறார் என தெரிவித்துள்ளார். அந்த வகையில் மயோசிடிஸ் பிரச்சனை சமந்தாவை இன்னும் விடாமல் துரத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also read: பிரபல நடிகரிடம் சிகிச்சைக்காக 25 கோடி கடன் வாங்கினேனா.? அவசர அவசரமாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

Trending News