Family Star Movie Review- நம்பி மோசம் போன விஜய் தேவரகொண்டா.. க்ரிஞ்சாக மாறிய ஃபேமிலி ஸ்டார், முழு விமர்சனம்

family-star
family-star

Family Star Movie Review: விஜய் தேவரகொண்டா, மிருணால் தாகூர் ஜோடியின் ஃபேமிலி ஸ்டார் இன்று வெளியாகி உள்ளது. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் தில் ராஜு படத்தை தயாரித்துள்ளார்.

ட்ரெய்லரிலேயே பெரிய அளவில் கவனம் ஈர்க்காத இப்படத்திற்கு இப்போது கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது. அந்த வகையில் படம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் கோவர்தன் எனும் கேரக்டரில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். அவர் வீட்டுக்கு குடிவரும் மிருணால் தாகூர் மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

அவர் எதற்காக அந்த வீட்டிற்கு வந்தார் என்ற உண்மை தெரிந்ததும் விஜய் தேவரகொண்டா அவரை விட்டு விலகுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? ஹீரோயின் எதற்காக ஹீரோவை துரத்துகிறார்? இருவரும் இணைந்தார்களா? என்பது தான் படத்தின் கதை.

க்ரிஞ்சாக மாறிய ஃபேமிலி ஸ்டார்

வழக்கமான கதை தான் என்றாலும் முதல் பாதி ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்ல வைத்திருக்கிறது. ஆனாலும் 45 நிமிடங்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது.

அதை அடுத்து இரண்டாம் பாதி சூர மொக்கையாக இருக்கிறது. எங்க ஓட பார்க்கிற என இயக்குனர் படம் பார்க்கும் ஆடியன்ஸை கதற வைத்து விடுகிறார்.

படத்தில் இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தாலும் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என மற்றவை அனைத்தும் சுமாருக்கும் கீழேதான்.

சுருக்கமாக சொல்லப்போனால் விஜய் தேவரகொண்டாவை நம்பி படம் பார்க்க வந்த ஆடியன்ஸ் தான் மோசம் போயிருக்கின்றனர். மற்றபடி மனோதிடம் இருப்பவர்கள் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2/5

Advertisement Amazon Prime Banner