ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Kushi Movie Review- மூச்சு முட்ட காதலிக்கும் விஜய் தேவரகொண்டா-சமந்தா.. குஷி எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Kushi Movie Review: விஜய் தேவரகொண்டா, சமந்தா கூட்டணியில் உருவான குஷி இன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே ப்ரமோஷன் மூலம் அனைவரின் கவனத்தையும் திருப்பி இருந்த இப்படம் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் குஷி எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

வழக்கமான காதல் கதை தான் என்றாலும் அதை ஃபீல் செய்ய வைத்திருக்கும் விதம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். கதைப்படி வேலை விஷயமாக காஷ்மீருக்கு வரும் விஜய் தேவரகொண்டா முஸ்லீம் பெண்ணான சமந்தாவை பார்த்ததுமே காதல் கொள்கிறார். அதைத்தொடர்ந்து அவர் செய்யும் காதல் சேட்டைகளை பார்த்து சமந்தாவும் காதலில் விழுகிறார்.

Also read: விஜய் தேவரகொண்டா-சமந்தா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதா.? குஷி எப்படி இருக்கு, அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

பிறகு தான் தெரிய வருகிறது சமந்தா ஒரு பிராமின் என்று. அதிலும் அவருடைய அப்பா சாஸ்திர சம்பிரதாயங்களை அதிகமாக பார்க்கக் கூடியவர். ஆனால் ஹீரோவின் அப்பா அதற்கு எதிர் துருவமானவர். இதனால் திருமணத்திற்கு எதிர்ப்புகள் வருகிறது. அதை தாண்டி பதிவு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.

மணிரத்னம் படத்தில் வரும் காதல், திருமணத்திற்கு பிறகான பிரச்சினைகள் என பார்த்து பார்த்து அலுத்து போன கதையாக இருந்தாலும் மூச்சு முட்ட காதலிக்கும் விஜய் தேவரகொண்டா, சமந்தாவை பார்க்கும் போது நமக்கே ஒரு லவ் ஃபீல் வந்துவிடுகிறது. இந்த கேரக்டராக நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று இளசுகள் கனவு காணும் அளவுக்கு திரைக்கதையை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

Also read: முன்னாள் கணவனை நினைத்து கண்கலங்கிய சமந்தா… குஷி பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்

அதை தூக்கி நிறுத்தும் அளவுக்கு இருக்கிறது விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் துள்ளலான நடிப்பு. அதிலும் சமந்தா பார்ப்பதற்கு சில்லென்று இருக்கிறார். அப்படி ஒரு ஜாலி லவ் ரைட் போல் இருக்கும் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள், சண்டைகள் என வருவது கொஞ்சம் சலிப்பை கொடுக்கிறது.

ஆனாலும் பின்னணி இசை, நீ என் ரோஜா, ஆராத்யா போன்ற பாடல்கள் மனதை வருடுகின்றன. மேலும் காஷ்மீர், கேரளா, துருக்கி என பல இடங்களின் அழகை காட்டும் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது. ஆக மொத்தம் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அற்புதமான ஒரு உணர்வை கொடுத்திருக்கும் இந்த படத்தை நிச்சயம் ஒருமுறை தியேட்டரில் என்ஜாய் செய்து பார்க்கலாம். அந்த வகையில் குஷி- செம ஃபீல்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5

Trending News