வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தோனி பிரதமர்.. விஜய் முதல்வர்.. ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் மிகவும் பிஸியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர் தோனி நடிகர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தற்போது புதிய விளம்பர படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த விளம்பரத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னை வந்துள்ள நிலையில், பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கும், தோனியின் ஷூட்டிங்கும் ஒரே ஸ்டூடியோவில் நடைபெறுவதால் அங்கு விஜயை சந்தித்துப் பேசியுள்ளார்.

vijay dhoni
vijay dhoni

இந்த சந்திப்பின் போது இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. அது மட்டுமின்றி ஒரே புகைப்படத்தில் தல மற்றும் தளபதி உள்ளனர் என ரசிகர்கள் இப்புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரையில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது . அதில் PM என எழுதப்பட்டு அதன் அருகில் தோனி புகைப்படமும், CM என எழுதப்பட்டு அதன் அருகில் விஜய் புகைப்படமும் உள்ளது. அதற்கு கீழ் “ஆளப்போகும் மன்னர்கள்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Trending News