வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சிந்தாம சிதறாம எல்லாமே வேணும்.. ரஜினியை உச்சி குளிர வைக்கும் வேலையில் இறங்கிய விஜய்

Rajini-Vijay: சோசியல் மீடியாவில் எப்போதும் அதிக உக்கிரமாக இருப்பது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் தான். அந்த அளவுக்கு அவர்களுக்குள் எப்போதுமே ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும். இது நேற்று இன்று கதை கிடையாது, வருடக்கணக்காக இந்த அலப்பறை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இப்போது விஜய் ரஜினியை உச்சி குளிர வைக்கும் முயற்சியில் இருக்கிறாரா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்த லியோ சக்சஸ் மீட் நிகழ்வு தான். அதில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா பருந்து கதை படு வைரலானது. அதை தொடர்ந்து விஜய் சக்சஸ் மீட் நிகழ்வில் இதற்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர் தான் என்று கூறி ஒட்டு மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

அது மட்டுமின்றி அப்பாவை போல் இருக்க வேண்டும் என்று மகன் ஆசைப்படுவது இல்லையா என்று கூறி ரஜினியை நான் எந்த இடத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னார். இதை விஜய் ரசிகர்கள் வைரல் செய்து வரும் நிலையில் ரஜினி ரசிகர்களும் இதற்குப் பின்னால் நிச்சயம் உள்குத்து இருக்கிறது என ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

Also read: லியோ மேடையில் தெரிந்த அப்பட்டமான அரசியல்.. கப்பு முக்கியம் பிகிலு, 5 தவறுகளால் சிக்கிய விஜய்

மேலும் விழா மேடையில் விஜய் பேசிய பல விஷயங்களை வைத்து பார்க்கும் போது அதில் இருக்கும் அரசியல் வெளிப்படையாகவே தெரிந்தது. அதாவது அவருடைய சமீப கால நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் வருகைக்கான முதல் கட்டமாக இருக்கிறது. விஜய்யும் அதற்காக முழுமூச்சில் பிளான் செய்து வரும் நிலையில் டாப் நடிகர்களின் ரசிகர்களையும் கவர் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழாவே நடைபெற்று இருக்கிறது.

அதனால்தான் அவர் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், ஒரே ஒரு உலக நாயகன் என பேசி அனைவரையும் இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்திருக்கிறார். இதன் மூலம் அனைவரின் ஓட்டும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும் எனவும் மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார். ஆனால் இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது போகப் போகத்தான் தெரியும். இருப்பினும் சூப்பர் ஸ்டாரை சந்தோஷப்படுத்த அவர் நினைத்ததற்கு முக்கிய காரணம் பெரிய இடத்து ஆதரவு வேண்டும் என்பதற்காகத் தான்.

ஏனென்றால் அரசியல் களம் சாதாரணமானது கிடையாது. ரஜினியே இதில் இறங்க முடிவு செய்து பிறகு பின்வாங்கியது அனைவரும் அறிந்தது தான். அதனாலேயே விஜய் அரசியல் செல்வாக்குள்ள ரஜினியை பகைத்துக் கொள்ளக் கூடாது என முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் கிளம்பியுள்ளது. ஆக மொத்தம் லியோ சக்சஸ் மீட் மொத்தமும் விஜய்யின் அரசியல் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

Also read: என் கண் முன்னாடியே நிக்காத ஓடிடு.. மொத்த பேரையும் கெடுத்துட்ட, வெளுத்து விட்ட லியோ தாஸ்

Trending News