மகாநதி சீரியலில் காவிரி குடும்பத்தை கவுக்க விஜய் செய்யும் லீலைகள்.. VIKA மூலம் டிஆர்பியை எகிற வைக்கும் விஜய் டிவி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியல் தான் தற்போது பேவரட் சீரியலாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி காதல் லீலைகள் அதிகரித்து வருவதால் அனைவரையும் கவுத்து விடுகிறது. ஆரம்பத்தில் காவேரி மற்றும் நிவின் என்ற ஜோடி தான் மகாநதி சீரியலை பார்க்க வைத்தது.

ஆனால் அதையெல்லாம் ஓவர் டேக் பண்ணி தற்போது VIKA என்ற தாரக மந்திரத்தை சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் இவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி அதிகப் புள்ளிகளை பெற்று வருகிறது. அதற்கு ஏற்ற மாதிரி தற்போது விஜய், காவேரி இருக்கும் இடத்திற்கு வந்து சில லீலைகளை செய்ய ஆரம்பித்து விட்டார்.

அதாவது சமையல் பண்ணும் பொழுது கையில் சிறுசாக அடிபட்டதை வைத்து காவிரி குடும்பத்திற்கு கேட்கும் படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். கையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது ஆம்புலன்ஸ்க்கு யாராவது போன் பண்ணுங்களேன் என்று கத்தி கூச்சல் இடுகிறார்.

இதைக் கேட்டதும் காவிரி குடும்பத்தில் இருப்பவர்கள் பயந்து போய் பார்க்கப் போகிறார்கள். அதற்குள் அந்த வீட்டின் ஓனர் பங்கஜ மாமி விஜய் கத்தியதை கேட்டு போய் பார்த்து இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணினாய் என்று சொல்லி நடந்த விஷயத்தை காவிரி குடும்பத்தில் இருப்பவர்களிடம் கூறுகிறார்.

இதையெல்லாம் தாண்டி அனைவரும் தூங்கிய நிலையில் காவிரி யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து விஜய்க்கு போன் பண்ணி பேசுகிறார். காவிரி போன் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் விஜயும் குஷியாகி விடுகிறார். காவேரி இந்த மாதிரி வேலைகளை பார்த்து ஏன் எங்க அம்மாவை வெறுப்பேற்றீங்க. பேசாமல் இங்கிருந்து கிளம்பிடுங்க என்று சொல்கிறார்.

அதற்கு விஜய் உன் குடும்பம் என்னை மருமகனாக ஏற்றுக் கொள்ளனும், நீயும் என்னை புரிந்து கொண்டு என்னுடன் வாழ வேண்டும். அதுவரை நான் இப்படித்தான் இருப்பேன் என்று சொல்லி சந்தோஷப்பட்டு கொள்கிறார். அடுத்ததாக குமரன் ஆரம்பிக்கும் கடையில் மாடலிங் விளம்பரத்தை பார்த்து விஜய் அங்கு வந்து ஹீரோ மாதிரி ஆக்சன் கொடுக்கிறார்.

உடனே கங்காவிடம் எனக்கு உங்க தங்கச்சி காவிரி தான் வேணும். அதுவரை நான் இப்படித்தான் இருப்பேன் என்று அனைவரும் முன்னாடியும் லவ் ப்ரொபோஸ் பண்ணுகிறார். இப்படியே போன எல்லாரையும் ஈசியாக விஜய் கவுத்துவிட்டு காவிரியை கரம் பிடித்து விடுவார்.

Leave a Comment