திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்கு ஜோடி த்ரிஷா இல்லையா.? புரியாத புதிராக லியோ படத்தை மெருகேற்றும் லோகேஷ்

Leo Movie Vijay and Trisha: பொதுவாக படம் ரிலீஸ் ஆன பிறகு தான் அதை பற்றி எல்லா பக்கமும் பேசிக்கொண்டே வருவார்கள். ஆனால் லோகேஷ், விஜய்யை வைத்து இயக்கி கொண்டிருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளை கேட்கவே குதூகலமாக இருக்கிறது.

அதன்படி லோகேஷ் லியோ படத்திற்கு புதிது புதிதாக நடிகர்களை இணைத்துக் கொண்டே வருகிறார். அதனாலேயே யாரும் யோசிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு செய்திகளும் இப்படத்தை பற்றி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடி த்ரிஷா என்று பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அவர் இல்லை என்பது போல் தகவல் வந்திருக்கிறது.

Also read: லோகேஷ் இயக்கும்போது நா செத்தா கூட பரவாயில்ல.. சென்டிமென்ட் ஆக பேசி லியோ பட வாய்ப்பு வாங்கிய வில்லன்

மேலும் த்ரிஷா போலவே மற்றொரு நடிகையும் இப்படத்தில் இணைந்துள்ளார். அதாவது மடோனா செபஸ்டின் ஜோடியாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் உடன் ஒரு பாடலில் ஆடுகிறார். அத்துடன் இவருக்கு 30 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து படத்தில் நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் இப்படத்தில் ஹீரோகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத லோகேஷ், மடோனாவை விஜய்க்கு ஜோடியாக அமைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் லியோ படத்தில் இரண்டு விஜய் இருப்பதால் ஒரு விஜய்க்கு த்ரிஷாவையும், மற்றொரு விஜய்க்கு மடோனாவையும் வைத்து இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

Also read: மூணு வருஷத்துல விஜய்யை காலி செய்யணும்.. 4 பான் இந்தியா இயக்குனர்களுடன் கூட்டணி போடும் அஜித்

ஏற்கனவே இப்படத்தில் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் இருப்பதால் எந்த மாதிரியான கதாபாத்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்று யூகிக்க முடியாத நிலையில், தற்போது மறுபடியும் இன்னொரு ஹீரோயின் வைத்து படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் பொழுது லோகேஷ் பெரிய தரமான சம்பவத்தை கொடுக்க இருக்கிறார் என்பது தெரிகிறது.

இதே போல் வில்லன் லிஸ்டில் புதிதாக ஒருவரை சேர்த்து இருக்கிறார். இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அவரும் இதில் இணைந்துள்ளதாக செய்தி தற்போது இணையத்தில் வந்து கொண்டிருக்கிறது. இப்படி லோகேஷ், புரியாத புதிராக எல்லோரையும் வைத்து லியோ படத்தை மெருகேற்றி கொண்டிருக்கிறார்.

Also read: சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

Trending News