சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜய்க்கு வெண்ணிலாவை வீட்டில் வைத்து பார்த்துக்க விருப்பமில்லை.. ராகினி செய்த சதியால் அவஸ்தைப்படும் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மீது இருந்த நம்பிக்கையில் தான் காவேரி வெண்ணிலாவை வீட்டிற்கு கூட்டிட்டு வந்தார். அதே மாதிரி வெண்ணிலாவை பார்த்த பிறகும் விஜய் மனதில் காவேரி தான் இருக்கிறார் என்பதும் புரிந்து விட்டது. ஆனால் இது தெரியாத காவிரி வீட்டில் நடக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து விஜய்யை தவறாக புரிந்து கொள்கிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி ராகினி, விஜய் மற்றும் காவேரி வாழ்க்கைக்குள் புகுந்து திருவிளையாடல் ஆடும் அளவிற்கு பல சதிகளை செய்து ராகினியை துன்புறுத்தும் அளவிற்கு அவஸ்தை கொடுத்து வருகிறார். அதாவது விஜய் மனதில் காவேரி இருந்தாலும் வெண்ணிலாவின் தற்போதைய நிலைமையை பார்த்து வருத்தப்படுகிறார். அதனால் விஜயால் முடிந்தவரை வெண்ணிலாவை குணப்படுத்தி விட வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார்.

அதற்காக வெண்ணிலாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் கொடுக்கிறார். இந்த விஷயத்தை காவிரிடம் சொல்ல நினைத்து காவிரிக்கு போன் பண்ணுகிறார். ஆனால் அந்த போனை ராகினி அட்டென்ட் பண்ணி அதில் ஆட்டத்தை திசை திருப்பி விடுகிறார். பிறகு காவேரி மற்றும் விஜய் போனில் பேசிக்கொள்ளாத அளவிற்கு விஜய் நம்பரை பிளாக் பண்ணி விட்டார்.

இது தெரியாத காவிரி, விஜய் போன் பண்ணவில்லை என்று தவித்து வருகிறார். காவிரிக்கு விஜய் போன் பண்ண பிறகு அந்த நம்பரும் போகாத படி பிஸியாகவே இருக்கிறது. இதனால் காவேரி, விஜய் நம்மை விட்டுப் போய்விடுவாரோ என்று கவலைப்பட ஆரம்பித்து விட்டார். காவேரி மனசு கஷ்டத்தில் இருப்பார் என்று புரிந்த கங்கா ஆறுதல் சொல்லும் விதமாக அவ்வப்போது காவிரியிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் வீட்டில் காவிரி, விஜய் நினைத்து வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் வெண்ணிலாவை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு வீட்டிற்கு போக முடியாமல் காவிரியை பார்த்து பேச முடியாமல் விஜய் தவித்து வருகிறார். ஆனாலும் வெண்ணிலவை பார்த்தாக வேண்டும் என்று விஜய் நினைத்ததால் ஹாஸ்பிடலில் சொல்லி கிளம்புவதற்கு முயற்சி எடுக்கிறார்.

ஆனால் விஜய் அப்படி கிளம்பும்போது வெண்ணிலாவிற்கு பிக்ஸ் வந்துவிடுகிறது. உடனே விஜய் அங்கே இருக்கும் படியான சூழல் ஏற்பட்டு விடுகிறது. டாக்டர் வெண்ணிலாவிற்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை உங்களை அடையாளம் தெரிகிறது என்றால் ஈஸியாக குணப்படுத்தி விடலாம் என்று சொல்கிறார். அத்துடன் நீங்கள் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை உங்க வீட்டிலே வைத்து ட்ரீட்மென்ட் பண்ணலாம் என்று சொல்கிறார்.

ஆனால் வெண்ணிலாவிற்கு வீட்டில் வைத்து ட்ரீட்மென்ட் கொடுத்து காவிரியை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று விஜய் நினைக்கிறார். அதனால் வெண்ணிலாவை வீட்டிற்கு கூட்டிட்டு போக விஜய்க்கு பிடிக்கவில்லை. இது எதுவும் தெரியாத காவிரி, விஜயை நினைத்து தவித்து ஃபீல் பண்ணுகிறார்.

Trending News