ஆரம்பத்தில் இருந்தே வெங்கட் பிரபு கோட் படத்தை இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார. அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் எல்லோருக்கும் இந்த படம் பிடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் படம் எடுத்து கொண்டாடச் செய்திருக்கிறார்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். சினிமாவில் தான் சம்பாதித்ததை வைத்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆனால் வில்லனாக நடித்தால் இமேஜ் போய்விடும் என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இந்த படத்தில் ஜீவன் கதாபாத்திரத்தில் இறங்கி அடித்திருக்கிறார்.
ஒரு காலத்தில் எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றவர்கள் அரசியலில் இறங்கிய பிறகு, தங்களுக்கு எந்த ஒரு நெகட்டிவ் இமேஜும் வந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆனால் விஜய் அதைப்பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.
3 படங்களில் இமேஜை பற்றி கவலை படாத தளபதி
படத்தில் விஜய், வில்லன் ஜீவன் கதாபாத்திரத்தில் நவரசங்களையும் காட்டி கலக்கி இருக்கிறார். இப்படி இதுவரை மூன்று படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் தளபதி. ஆனால் இந்த படத்தில் ஒரு மாறுதலான தோற்றத்தில் அசத்தியிருக்கிறார்.
விஜய் இதற்கு முன்னர் அழகிய தமிழ் மகன் மற்றும் பிரியமுடன் ஆகிய இரண்டு படங்களிலும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களுமே விஜய்க்கு கை கொடுக்கவில்லை. ஆனால் கோட் படத்தில் அவர் ஏற்ற நடித்து இருந்த ஜீவன் கதாபாத்திரம் அவருக்கு நன்றாக அமைந்திருக்கிறது.
- வெங்கட் பிரபு கோட்டை விட்ட இடங்கள்
- கோட் படம் பார்த்தவங்க இந்த விஷயத்தை நோட் பண்ணிங்களா?
- விஜய்யின் கோட் தரிசனம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்