ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

3 இயக்குனர்களிடம் இந்த ஒரு விஷயத்தை எதிர்பார்க்கும் விஜய்.. சொல்லி அடிக்க போகும் தளபதி 70

Vijay expects this one thing from 3 directors: விஜய் தற்போது அரசியலில் முழுமூச்சாக இறங்கி செயல்படுவதாக அவருக்கான கட்சிப் பெயரை அறிவித்திருக்கிறார். இதுவரை சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகர்கள் யாரும் டாப்பில் இருக்கும் பொழுதே வந்ததே இல்லை. ஆனால் முதல் முறையாக விஜய் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் பொழுதே அரசியலுக்குள் கால் தடம் பதித்து விட்டார்.

இதற்கு முழுக்க முழுக்க அவர் அரசியலில் செய்ய நினைக்கும் நல்ல விஷயங்களும், அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று எடுத்த முடிவாக இருக்கும் என்று பலரும் பார்க்கப்பட்டு வருகிறார்கள். இதே நேரத்தில் அரசியலில் விஜய் நுழைந்து விட்டால் இனி படங்களில் பார்க்க முடியாதோ என்ற ஏக்கமும் ரசிகர்களிடமும் இருந்து வருகிறது.

அத்துடன் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தை முடித்த பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டாரோ என்ற சந்தேகமும் எழும்புகிறது. ஆனால் இன்னும் எலக்சனுக்கு இரண்டு வருடங்கள் இருப்பதால் அதற்குள் ஒரு தரமான படத்தை கொடுத்து விட வேண்டும் என்று விஜய் நினைக்கிறார்.

Also read: விஜய் அண்ணன் கிளம்பியாச்சு காலியா இருக்கும் திண்ணை.. இடத்தை பிடித்த முண்டாசு கட்டிய 5 நடிகர்கள்

அதுவும் எப்படி என்றால் அவர் நடிக்கப் போகும் 70வது படத்தில் அவருக்கு பிடித்த அரசியல் காட்சிகள் நிறைய இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறார். விஜயகாந்த் எப்படி படங்கள் மூலம் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல விஜய் நடிக்கப் போகும் படத்தில் ஒரு அரசியல் தாக்கத்தை உருவாக்கி மக்களிடம் நச்சென்று ஒரு பதிவை போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அந்த வகையில் தற்போது இவருடைய படத்தை இயக்குவதற்காக கிட்டத்தட்ட மூன்று இயக்குனர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் சங்கர், அட்லி மற்றும் கார்த்திக் சுப்புராஜ். இவர்களில் யார் கதையில் விஜய் எதிர்பார்க்கிற அரசியல் காட்சிகளும், மக்களை கவரக்கூடிய டயலாக் மற்றும் பொதுவான நல்ல விஷயங்களை முன் வைக்கிறார்களோ அவர்களுக்கே முதலில் கால் சீட் கொடுக்கப் போகிறார்.

ஒருவேளை இவர்கள் மூன்று பேருடைய கதையிலும் விஜய்க்கு ஏற்ற மாதிரி அரசியல் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றால் ரவுண்ட் கட்டி மூன்று படத்திலும் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தற்போது GOAT படப்பிடிப்பை சீக்கிரத்தில் முடித்துவிட்டு அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் கவனத்தை செலுத்த விஜய் முடிவு எடுத்திருக்கிறார். இன்னும் கூடிய விரைவில் அதற்கான பிள்ளையார் சுழியை போடப் போகிறார்.

Also read: இனிமே நாங்க தான் தனிக்காட்டு ராஜா.. விஜய்யின் அரசியல் முடிவை கொண்டாடும் கூட்டம்

Trending News