Vijay: அடிச்சு மழை பெய்யுது, சாயம் எல்லாம் வெளுக்குது என்று சொல்வார்கள். இதை விஜய்க்கு பொருத்தமாக இப்போது பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு காரணம் இன்று விஜய் தமிழக ஆளுநரை சந்தித்தது தான். ஒரு கட்சித் தலைவராக ஆளுநரை சந்தித்திருக்கிறார் விஜய்.
அதுவும் அண்ணா யுனிவர்சிட்டியில் நடந்த பெண் வன்கொடுமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் கையில் ஒப்படைத்திருக்கிறார்.
இது நல்ல விஷயம் தானே எதுக்கு இதுக்கெல்லாம் விஜய் மீது விமர்சனம் வைக்க வேண்டும் என்று தோன்று இருக்கலாம்.
இன்று ஆளுநரை சந்தித்த விஜய் எப்படியும் இது குறித்து பேசுவார் என ஒட்டுமொத்த மீடியா கூட்டமும் காத்திருந்தது. ஆனால் விஜய் டாட்டா காட்டி விட்டு பறந்து விட்டார்.
இதில் என்ன இருக்கு சொல்லில் காட்டாமல் எல்லாத்தையும் செயலில் காட்டலாம் என்று இருப்பார் என்று வைத்துக் கொள்ளுவோம்.
ஆனால் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டில் தன்னுடைய கட்சி கொள்கையை பற்றி சில விஷயங்களை பேசி இருந்தார்.
அது ஞாபகம் இருப்பவர்களுக்கு, இவர் ஏன் ஆளுநரை பார்த்தார் என்று தோன்றலாம்.
ஏனென்றால் தன்னுடைய கட்சி கொள்கையில் தமிழகத்திற்கு ஆளுநர் வேண்டாம் என்ற சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்லி இருந்தார்.
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆளுநர் வேண்டாம்னு சொல்லிட்டு, இன்னைக்கு ஆளுநரை சந்தித்து வந்தால் கேள்வி கேட்க தானே செய்வார்கள்.
அதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய தலைவர் வன்னியரசு பேசும்போது விஜய் Elite அரசியல் செய்கிறார். அவர் இன்று ஆளுநரை சந்தித்தது எல்லாம் பாஜகவின் வேலைதான்.
பாஜக இப்படித்தான் தன் ஆதரவாளர்களை மறைமுகமாக ஆளுநரை சந்திக்க வைக்கும் என பேசி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, விஜய் ஆளுநரை சந்தித்தது குறித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.